பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள்.. டிகே சிவகுமார் கருத்து என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக !

    பெங்களூர்: கர்நாடக இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகாவில் கடந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கூட்டணி ஆட்சியின்போது, பதவிகளை ராஜினாமா செய்ததற்காக 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.

    DK Shivakumar agree the mandate of the Karnataka people

    தற்போதைய நிலவரப்படி 12 தொகுதிகளில் பாஜக வெற்றி / முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயச்சை ஒரு தொகுதியிலும், முன்னிலை பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் நிருபர்களிடம் பேசிய, டி.கே.சிவகுமார், மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனவே இந்த தோல்வியை நாங்கள் ஏற்கிறோம். அதே நேரம் மனது உடைந்து போகும் அளவுக்கான தோல்வி இது கிடையாது. இடைத் தேர்தலிலும், பொதுத் தேர்தல்களும் வேறுபட்டவை. எனவே இதன் முடிவுகளை வைத்து கட்சியின் பலத்தை அறிய முடியாது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகவும் வலுவாக உள்ளது. பாஜகவினர் சொல்வதை போல காங்கிரஸ் பலவீனமாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு.. 5 பேர் பலி! பலர் மாயம்.. மீட்பு பணியில் ராணுவம்நியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு.. 5 பேர் பலி! பலர் மாயம்.. மீட்பு பணியில் ராணுவம்

    வாக்குபதிவு நடைபெறுவதற்கு முன்பாகதான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நிலை நீடித்து வந்தது, மற்றும் சிவகுமார் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையானார்.

    இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவுக்கு கர்நாடகாவில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து நிலையில் அந்தக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    With trends showing a lead for the Bharatiya Janata Party (BJP) in 11 of the 15 constituencies going to polls in Karnataka, senior Congress leader DK Shivakumar said on December 9 that the party had to "agree the mandate of the people".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X