பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். சின்னமாம்! 'கை' காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூருக்கு போலீசுக்கு நூதன உத்தரவு

Google Oneindia Tamil News

பெங்களூரு: காங்கிரஸ் சின்னத்தை குறிப்பதால் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என தேர்தல் பணியில் ஈடுபடும் பெங்களூரு போலீசாருக்கு நூதன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள 28 எம்பி தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு போலீசாருக்கு தேர்தல் நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

Dont use hand for stop the vehicle, Order to bengalore police

என்னுடைய அண்ணன் அழகிரி.. எடப்பாடியிடம் கெஞ்சினேன்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்என்னுடைய அண்ணன் அழகிரி.. எடப்பாடியிடம் கெஞ்சினேன்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்

போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் தயாரித்துள்ளது. அந்த புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு சாவடிகளை சுற்றி வேட்பாளர்களின் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பது விதியாக உள்ளது. அதன்படி காங்கிரசின் சின்னமாக 'கை' இருப்பதால், அந்த சின்னத்தை பயன்படுத்தக்கூடாது.

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுவாக போலீசார் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்துவார்கள். இப்படி செய்வதால் அது காங்கிரசின் சின்னத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் காங்கிரஸ் சின்னத்தை குறிக்கும் வகையில் உள்ளங் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூதனமான இந்த தேர்தல் விதிமுறை உத்தரவு பெங்களூரு போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Don't use hand for stop the vehicle in Polling booth in election day, Order to bengalore police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X