Just In
கர்நாடகா, ஜார்க்கண்ட்டில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 4.7 ஆக பதிவு
பெங்களூரு: கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று காலையில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.7 அலகுகளாகப் பதிவானது.
அடுத்தடுத்து ஏற்படும் புயல், நிலநடுக்கம்.. என்ன காரணம்?
கர்நாடகாவின் ஹம்பி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் பகுதிகளில் இன்று காலை 6.55 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

ஆனால் பிற பகுதிகளில் இதுபோன்ற நில அதிர்வு உணரப்படவில்லை. இந்த நில நடுக்கமானது ரிக்டரில் 4.0 மற்றும் 4.7 ஆக பதிவாகி இருந்தது.
மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. மத்திய அரசு வெளியீடு
இந்நிலநடுக்கத்தால் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்பது முதல் கட்ட தகவல். இது தொடர்பாக கூடுதல் தகவல்களை புவியியல்துறையினர் விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.