SHOCKING: வாயில் துணி.. 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. சாக்கடையில் மிதந்த சடலம்.. 4பேர் கைது
பெங்களூரு: 8 வயது சிறுமியின் வாயில் துணியை அடைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த பிஞ்சுவின் கழுத்தையும் நெறித்து சாக்கடையில் தூக்கி எறிந்துள்ளனர் 4 கொடூரர்கள்.. இந்த பயங்கர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
மங்களூரு அருகே கூலி வேலை செய்யும் தம்பதி வசித்து வருகின்றனர்.. இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. பிழைப்பு தேடி இங்கு வந்துள்ளனர்.. கணவருக்கு 35 வயதாகிறது, மனைவிக்கு 28 வயதாகிறது.. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி
கடந்த 2 வருடமாக மங்களூரு அருகே உள்ள பராரி என்ற கிராமத்தில் உள்ள ராஜ் டைல்ஸ் ஃபேக்டரியில் ஒரு குடிசை போட்டு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

காணவில்லை
இந்நிலையில், கடந்த நவம்பர் 21 ம் தேதி சாயங்காலம், இவர்களின் 4 குழந்தைகளும் தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.. இதில் 3 குழந்தைகள் வீட்டுக்கு வந்துவிட்டனர்.. ஆனால் 8 வயது சிறுமி மட்டும் வீடு திரும்பவில்லை... இதனால் பதறி போன பெற்றோர், குழந்தையை தேடி அலைந்தனர்.. கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு, டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்திலேயே, கழிவு நீர் செல்லும் சாக்கடையில் சடலமாக அந்த குழந்தை விழுந்து கிடந்ததை பார்த்து கதறி துடித்தனர்.

சடலம்
இதுகுறித்து, உடனடியாக மங்களூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.. போலீசாரும் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு விசாரணையை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.. அந்த ரிப்போர்ட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.. இதையடுத்து, அந்த ஃபேக்டரியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போலீசார், அதிர் பதிவாகியிருநத் காட்சிகளை வைத்து, சிலரை விசாரித்தனர்.

சாக்கடை
இவர்களும் கூலி தொழிலாளர்கள்தான்.. மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.. முனீம்சிங், மணீஷ்திர்கி, முகேஷ்சீங், ஜெய் சிங் ஆகியோரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டபோதுதான், சிறுமியை இவர்கள் அனைவருமே பலாத்காரம் செய்ததும், இறுதியில் அவரை கொலை செய்து சாக்கடையில் தூக்கி வீசியதும் தெரியவந்தது..

வன்கொடுமை
இந்த சம்பவம் தொடர்பாக, மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், செய்தியாளர்கர்களிடம் சொன்னதாவது: சம்பவத்தன்று சிறுமி விளையாடி கொண்டிருநத்போது, இந்த 4 பேரும் அந்த பக்கமாக வந்தள்ளனர்.. சிறுமியை பார்த்ததும் அருகில் வந்து, சாக்லேட் வாங்கி தருவதாக சொல்லி, தாங்கள் தங்கி இருக்கும் ரூமுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்..

கொலை
அப்போது சிறுமி சத்தம் போடவும், வாயில் ஒரு துணியை வைத்து அடைத்து, பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளனர்.. இறுதியில் அந்த குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று, சாக்கடையில் கொண்டு போய் வீசிவிட்டு மறுபடியும் ரூமுக்கு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த 4 கொடூரர்களையும் போக்சாவில் கைது செய்த போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை கர்நாடகாவில் ஏற்படுத்தி வருகிறது.