India
  • search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலிரவு அறையில் ஆரம்பிச்சது.. இன்னும் முடியலை.. பெங்களூரில் துயர சம்பவம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கல்யாணம் முடிந்து ஆசை ஆசையாக அன்று முதலிரவு ரூமுக்குள் நுழைந்தார் இளம்மனைவி.. அவ்வளவுதான்.. அப்போது அழ ஆரம்பித்தவர் இன்னமும் அழுது கொண்டே இருக்கிறார்.. இந்த துயர சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது!

எச்ஏஎல் அருகே லால் பகதூர் சாஸ்திரி நகரில் வசிப்பவர் பரத்.. இவர் ஒரு என்ஜினியர்.. இவருக்கு ஸ்வராணி என்பவருடன் கல்யாணம் நடந்தது.. கல்யாண பெண் ஒரு தொழிலதிபரின் மகள் ஆவார்.

 Fake Engineer arrested in Bengaluru for Cheating Case

இரு குடும்பத்தினரின் விருப்பப்படிதான், இந்த கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி அன்று பெங்களூருவில் இருக்கும் ஒரு ஃபேமஸ் ஆன மண்டபத்தில் நடந்தது.

இந்த கல்யாணத்துக்கு பெண் வீட்டில் வரதட்சணையை அள்ளி அள்ளி தந்திருந்தனர்.. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை மாப்பிள்ளைக்கு வாங்கி தந்தனர்.. 5 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், ரூ 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வைர மோதிரம் என எல்லாமே இன்ஜினியர் மாப்பிள்ளை ஆசை ஆசையாக தந்துள்ளனர்.. அதாவது எப்படியும் 3 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பார்கள்.

படு அமர்க்களமாக கல்யாணம் நடந்து முடிந்தது.. அன்றைய தினம் முதலிரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.. மணமகள் ஆசையாக ரூமுக்குள் காத்து கிடந்தார்.. அப்போதுதான் மாப்பிள்ளை தள்ளாடி கொண்டே உள்ளே வந்தார்.. இதை பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டார் மணப்பெண்.. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அடுத்த அதிர்ச்சியாக, மனைவியை வர்ணிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த மணப்பெண்... ரூமை விட்டு வெளியே வர முயன்றுள்ளார். இதனால் இருவருக்கும் அப்போதே தகராறு வெடித்துள்ளது.

ஒரு கட்டத்தில் டென்ஷன் அடைந்துவிட்ட மாப்பிள்ளை, மனைவியை பளார் என்று அந்த ரூமிலேயே இழுத்து போட்டு அடித்துள்ளதாகவும் தெரிகிறது. முதலிரவு ரூமுக்குள் இருந்து, ரணகள சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் பதறி கொண்டு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர்.. மறுநாள் அந்த முதலிரவை வைத்து கொள்ளலாம் என்றும் சொல்லி உள்ளனர்.

அதன்படியே மறுநாளும் முதலிரவு அறைக்குள் விதவிதமான சத்தங்கள் கேட்டன.. அன்றும் தகராறுதான்.. அடிதடிதான்.. வீட்டுக்கு போனால்தானே சண்டை வருகிறது? இனிமேல் ராத்திரி நேரத்தில் போகக்கூடாது என்று முடிவெடுத்த மாப்பிள்ளை பரத், நைட் நேரத்தில் குடித்துவிட்டு, ஊர் சுற்றி வந்துள்ளார்.. பிறகு நடுராத்திரிக்கு மேல் எல்லாரும் தூங்கிய பிறகு உள்ளே வருவார்.. ஒருவேளை மனைவி விழித்திருந்தால் அன்றும் சண்டைதான்.

இதனால் வெறுத்து போன இளம்மனைவி, நடந்த எல்லா விஷயத்தையும் தன் வீட்டில் சொல்லி அழுதுள்ளார்.. பிறகு இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.. போலீசாரும் பரத் மீது வழக்கு பதிவு செய்து, என்ன நடந்தது என்று மாப்பிள்ளை பரத்திடம் விசாரித்தனர்.. அப்போதுதான், போலீசாருக்கே தூக்கி வாரிப்போட்டது, மாப்பிள்ளை பரத்திற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டதாம்.. அதை மறைத்துதான் மொத்த குடும்பத்தினரும் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, மாப்பிள்ளை இன்ஜினியரிங் படிக்கவே இல்லையாம்.. வெறும் 12-ம் வகுப்புதானாம்.. இவருக்கு போய் சொகுசு கார், வைர மோதிரம் தந்தோமே என்று பெண் வீட்டில் அதிர்ந்து போய் உள்ளனர்.. இப்போதைக்கு டைவர்ஸ் கேட்க முடிவு செய்திருக்கிறாராம் மணப்பெண்!

English summary
Fake Engineer arrested in Bengaluru for Cheating Case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X