பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாய்களை புலியாக மாற்றிய கர்நாடகா விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    நாய்களை புலியாக மாற்றிய கர்நாடகா விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

    பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ஒரு விவசாயி, குரங்குகளின் அச்சுறுத்தலிலிருந்து தனது காபி மற்றும் அரக்கு பயிரைப் பாதுகாக்க புலி போன்ற தோற்றத்திற்கு தனது நாய்க்கு சாயமிட்டுள்ளார். இந்த நல்ல தீர்வாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    கர்நாடகாவின் சிவமொகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள நளூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுடா என்ற விவசாயி. இவர் தனது நாயின் உரோமத்தை புலி போல தோற்றமளிக்க சாயமிட்டுள்ளார்.

    முன்னதாக புலிகளின் மென்மையான பொம்மைகளைப் பயன்படுத்தி பயிர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால பலன் அளிக்காததால் தனது நாய்க்கு புலி வேஷம் வரைவதற்கு முடிவு செய்ததாக அவர் கூறினார்.

    கேரளாவில் பசிக் கொடுமை.. அழுதபடியே கை நிறைய மணலை அள்ளி உண்ட குழந்தைகள்.. தாய்க்கு அரசு வேலைகேரளாவில் பசிக் கொடுமை.. அழுதபடியே கை நிறைய மணலை அள்ளி உண்ட குழந்தைகள்.. தாய்க்கு அரசு வேலை

    தோட்டத்தில் வைப்பேன்

    தோட்டத்தில் வைப்பேன்

    "முன்னதாக நான் கோவாவிலிருந்து மென்மையான பொம்மைகளை (புலிகளின்) கொண்டு வந்து குரங்குகளை பயமுறுத்துவதற்காக அவற்றை என் தோட்டத்தில் வைப்பேன். ஆனால் கொஞ்ச காலத்தில், பொம்மையின் நிறம் மங்கிவிடும், குரங்குகள் திரும்பி வந்து பயிரை சேதப்படுத்தும். இதனால் என்ன செய்வது என்று யோசித்த நான், என் நாய் புல்பூலை ஒரு புலி போல தோற்றமளிக்க நாம் பயன்படுத்தும் முடி சாயத்தைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டினேன்.

    பயப்படும் குரங்குகள்

    பயப்படும் குரங்குகள்

    நான் காலையில் ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை என இப்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை புல்பூலை(நாயை) தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறேன். புலியைப் போன்ற நாய் இருப்பதைக் கண்டு குரங்குகள் ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன். குரங்குகள் இப்போது என் தோட்டத்துக்கள் நுழைவதைத் தவிர்க்கின்றன" இவ்வாறு கூறினார்.

    புலிவேஷம்

    புலிவேஷம்

    இதனிடையே கவுடாவின் மகள் அமுல்யா கூறுகையில் "எனது தந்தையின் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியைக் கண்டு, மற்ற கிராம மக்களும் என் தந்தையைப் போல் நாய்களுக்கு புலி வேஷம் போட தொடங்கியுள்ளனர்.

    இப்போது இல்லை

    இப்போது இல்லை

    முன்னதாக நாங்கள் குரங்கு அச்சுறுத்தல் காரணமாக நிறைய சிக்கல்களை எதிர்கொண்டோம். அவை எங்கள் பயிர்களை அழித்து வந்தன. குரங்குகளை பயமுறுத்துவதற்காக எங்கள் நாயை புலி போல வண்ணம் தீட்டுவது என் தந்தையின் யோசனையாக இருந்தது. இப்போது யோசனையை செயல்படுத்திய பின் எங்கள் கிராமத்தில் எல்லோரும் என்னைப் போலவே என் தந்தையை பாராட்டுகிறார்கள்"என்றார் அமுல்யா.

    English summary
    Farmers In Karnataka Have Started Making Their Dogs Resemble Tigers because to protect his coffee and areca crop from the menace of monkeys.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X