பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. அதுக்காக இப்படியா?.. கர்நாடகத்தில் ரூபாய் நோட்டுகளை சோப்பு தண்ணீரில் கழுவிய விவசாயி

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனா அச்சத்தால் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஒருவர் ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு கழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    கர்நாடகத்தில் ரூபாய் நோட்டுகளை சோப்பு தண்ணீரில் கழுவிய விவசாயி - வீடியோ

    கொரோனா வைரஸ் எதிலிருந்து வேண்டுமானாலும் பரவலாம் என்பதால் நாம் வாங்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை மஞ்சள் நீரில் கழுவி எடுத்து வைத்து வருகிறார்கள். அது போல் கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    Farmers wash currency notes in soap water as Coronavirus fear

    இதனால் ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் கொடுக்கும் போதும் கைகளில் உறைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் ரூபாய் நோட்டுகளை எச்சில் தொட்டு எண்ணும் பழக்கத்தை கைவிடுங்கள் என அறிவுறுத்துப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மரனசகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த விவசாய பொருட்களை சந்தையில் விற்றார்.

    அதன் மூலம் தான் சம்பாதித்த பணத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறி கிண்ணத்தில் இருந்த சோப்பு தண்ணீரில் போட்டு அலசியுள்ளார். அதில் ரூ 500 முதல் ரூ 2000 வரை நோட்டுகள் இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை தண்ணீரில் அலசிய பின்னர் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

    இந்த வீடியோ சமூகவலைதளங்களில வைரலானது. அண்மையில் வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் கொடுத்த பணத்தை அயன்பாக்ஸ் வைத்து எடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

    English summary
    Farmers wash currency notes in soap water as Coronavirus fear intensifies in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X