மருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்
பெங்களூரு: மருமகள் முன்பு திடீரென டிரஸ்களை கழட்டிவிட்டு அத்துமீறி நடந்துள்ளார் மாமனார்.. இறுதியில் ஒரு கொலை வரை சென்று.. அந்த அப்பாவி பெண்ணை மாமனார் கொலையே செய்துவிட்டார்!
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ராகி முத்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு. விவசாயம் செய்து வந்த இவருக்கு அனில் என்ற மகன் உள்ளார்.

அனில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வீணா என்ற பெண்ணை திருமணம் செய்து, அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
நல்லா இருந்த மாமனாருக்கு திடீரென கேடு வந்துவிட்டது.. சில மாதங்களாகவே புத்தி கெட்டு போய், மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மருமகள் வீணாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீணா செய்வதறியாது தவித்து நின்றார்.
கணவனிடம் சொன்னால், தேவையில்லாமல் குடும்பம் பிரிந்துவிடும், தந்தைக்கும், மகனுக்கும் பிரச்சனை வந்துவிடும் என்று குழம்பி தவித்தார். இப்படி கணவனிடம் மருமகள் சொல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு மாமனார் இன்னும் அத்துமீறலில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில்தான் அனில் வெளியூருக்குவேலை விஷயமாக சென்றார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நாகராஜ், நைட் நேரத்தில் வீணாவிடம் நிறைய முறை தொல்லை தந்துள்ளார்.
பிறகு, திடீரென டிரஸ்களை கழட்டிவிட்டு, வீணா அறைக்குள் நுழைந்துள்ளார்.. கட்டாயப்படுத்தி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தும் உள்ளார்.. அப்போதுதான் வேறு வழியின்றி சத்தம் போட்டு கத்தினார் வீணா.
இப்படி வீணா சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்துவிட்டனர். இதனால் பயந்துபோன நாகராஜ், அங்கே இருந்த கத்தியை எடுத்து மருமகளை சரமாரி குத்திவிட்டார். இதில் கீழே விழுந்து வீணா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், வீணாவின் உடலை மீட்டு, நாகராஜை சிறையில் அடைத்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!