பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலாவை நோக்கிய பயணத்தில் சிறப்பு.. புவியின் கடைசி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்-2

Google Oneindia Tamil News

பெங்களூரு: நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் 5வது புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 22ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

Fifth earth bound orbit raising maneuver for Chandrayaan 2 spacecraft performed today

சந்திரயான் 2 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சந்திரயான்-2 விண்கலம் 5வது புவி வட்டப்பாதைக்கு இன்று பிற்பகல் மூன்று மணி 4 நிமிடத்தின் போது உயர்த்தப்பட்டது. இதுதான் புவியின் கடைசி சுற்றுவட்டப்பாதையாகும்.

இதன்பிறகு விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்க வெற்றிகரமாக தரையிரங்க உள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென்பகுதியில் சந்திரயான் 2 வெற்றிகரமாக இறங்கும் போது அந்த நாடும் செய்யாத ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அதற்கான முழுபணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள்.

English summary
Fifth earth bound orbit raising maneuver for Chandrayaan2 spacecraft has been performed today (August 6, 2019) at 1504 hrs (IST) as planned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X