பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போக பிளான் இருக்கா? கர்நாடக அரசு ரூல்சை பாருங்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூருக்கு விமானத்தில் பயணிப்போருக்கான, தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்களும் செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில், பெங்களூருக்கு தமிழகத்திலிருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புதிய விதிமுறைகள் வெளியாகியுள்ளன.

கொரோனா நோய் தடுப்புக்காக, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையான விதிமுறைகளை கடைபிடித்து வருகிறது. அதன்படி கர்நாடகாவும் விதிமுறைகளை மாற்றியபடி உள்ளது.

நீங்கள் எந்த நகரத்தில் இருந்து விமானத்தில் பெங்களூருக்கு, பயணித்தாலும் அதற்கு முன்பாக சேவா சிந்து என்ற வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

பெங்களூர் சென்று சேர்ந்த பிறகு, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இதிலும் வேறுபாடான விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன? 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க! கொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன? 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க!

வெப்சைட்

வெப்சைட்

கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெங்களூரு பயணிக்கக்கூடிய அனைவரும் சேவா சிந்து வெப்சைட்டில் பதிவு செய்துகொண்டு இ பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயம். சேவா சிந்து என்பது கர்நாடக அரசின் வெப்சைட் பெயர். இதில், பதிவு செய்தால், எந்த நாளில் நீங்கள் பெங்களூர் அல்லது கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு முடியும் என்பதற்கான ஸ்லாட் ஒதுக்கப்படும். இ பாஸ் போன்ற நடைமுறை இது கிடையாது என்ற போதிலும் ஓரளவுக்கு கட்டுப்பாடுகள் உள்ள வழிமுறைதான்.

ஆவணம்

ஆவணம்

இந்த வெப்சைட்டில் உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இதன் பிறகு கியூ ஆர் கோட் கொண்ட தகவல் உங்களது செல்போன் நம்பருக்கு அல்லது ஈமெயில் ஐடிக்கு வரும். அதை நீங்கள் இ பாஸ் போல டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில எல்லையில் அதிகாரிகள் கேட்கும்போது வெப்சைட்டில் பதிவு செய்ததற்கான ஆவணமாக இதை கியூஆர் கோட் உடன் கூடிய மெசேஜை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.

உறுதியளிப்பு

உறுதியளிப்பு

வெப்சைட்டில் பதிவு செய்த உடனேயே பயணிக்க அனுமதி கிடைத்துவிட்டதாக நினைக்க கூடாது. பயணம் மேற்கொள்ளலாம், என்ற உறுதியை கர்நாடக அரசு வழங்க வேண்டும். அதற்குத்தான் கியூ ஆர் கோட் உடன் கூடிய அந்த மெசேஜ் அனுப்பப்படுகிறது. அது இருந்தால் மட்டுமே நீங்கள் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக பகுதிகளுக்கு, பயணிக்க முடியும்.

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

வெளிநாடுகளில் இருந்து கர்நாடகா வருவோருக்கான தனிமைப்படுத்துதல் விதிமுறைகளையும் கர்நாடக அரசு மாற்றியுள்ளது. புதிய விதிமுறைப்படி, வெளிநாட்டில் இருந்து வருகை தருவோர், யாத்ரி கர்நாடகா என்ற ஆன்லைன் போர்ட்டலில், பயண தேதிக்கு 72 மணி நேரம் முன்பாக சுய டிக்லரேஷன் செய்யவேண்டும்.

தமிழகத்திலிருந்து வருவோர்

தமிழகத்திலிருந்து வருவோர்

வணிக காரணங்களுக்காக வருகை தருவோர் அல்லது குறுகிய காலத்திற்கு வருகை தருவோர் அல்லது கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வைத்திருப்போருக்கு தனிமைப்படுத்துதல் விதிமுறை கிடையாது. பிறருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம். மகாராஷ்டிராவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்துதல் பிறகு ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் அவசியம். தமிழகத்திலிருந்தும், டெல்லியில் இருந்தும் கர்நாடகா செல்வோருக்கு மூன்று நாட்கள் இன்ஸ்டிடியூஷன் தனிமைப்படுத்துதல் (நிறுவன தனிமைப்படுத்துதல்) அதைத் தொடர்ந்து 11 நாட்கள், வீட்டு தனிமைப்படுத்தல் அவசியம். பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய அறிகுறி இல்லாத நபர்கள் எனில் அவர்களுக்கு 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் அவசியம்.

English summary
People flying to Bengaluru must register themselves on the Seva Sindhu website. Karnataka government has revised quarantine rules for people returning from abroad in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X