பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி நேரம்.. 100 அடி கிணறு.. டார்ச் அடித்து பார்த்த சித்தராஜ்.. வீலென்று அலறல்.. என்னாச்சு?!

Google Oneindia Tamil News

பெங்களூரு: ராத்திரி நேரம்.. 100 அடி கிணற்றுக்குள்.. டார்ச் அடித்து பார்த்தார் சித்தராஜ்.. அப்போது அவர் அலறிய அலறலை கேட்டு ஊரே நடுங்கிவிட்டது.. சித்தராஜ் கிணற்றில் அப்படி என்னதான் பார்த்தார்? ஏன் அலறினார்? சினிமாவை மிஞ்சுகிறது இந்த செய்தி!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் அருகே காரபுரா என்ற பகுதி உள்ளது.. இந்த ஊருக்குள் ஒரு காட்டு பூனை புகுந்து விட்டது.. அந்த பூனை கிராமத்தில் இருந்த ஒரு கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.. அந்த கிணறு 100 அடி ஆழத்துக்கு இருக்கிறதாம்!

forest official enters 100 feet deep well to rescue leopard near karnataka

இதை பார்த்து பதறிய ஊர் மக்கள், பூனையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று சொல்லி வனத்துறைக்கு தகவல் தந்தனர்.. கொஞ்ச நேரத்தில் வனத்துறையினரும் அங்கு வந்தனர்.. அதில் ஒருவர் கிணற்றில் இறங்கவும் முயற்சித்தார். அவர் பெயர் சித்தராஜ்!

பூனையை எப்படி காப்பாற்றலாம் என்று முதலில் பிளான் செய்தார்.. 100 அடி ஆழம் என்பதால், இரும்பு கூண்டை உள்ளே இறக்கி, பூனையை மீட்கலாம் என்று முடிவெடுத்தார்.. அதன்படியே இரு அறைகள் கொண்ட இரும்பு கூண்டு தயாரானது.. அதற்குள் சித்தராஜும் உட்கார்ந்து கொண்டார்.. அந்த கூண்டு உள்ளே இறங்கியது.. கிணற்றை சுற்றிலும், கிணற்றுக்கு உள்ளேயும் நிறைய செடி, கொடிகள் நிறைந்திருந்தன.

கிணற்றுக்குள் இறங்க இறங்க, மேலே இருந்த அதிகாரிகளிடம் செல்போனில் பேசி கொண்டே உள்ளே சென்றார் சித்தராஜ்.. அந்த கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. அதனால் கூண்டினை எளிதாக இறக்கமுடிந்தது.. 100 ஆடி ஆழ கிணற்றுக்குள் சென்றுவிட்ட பிறகும், பக்கத்தில் கிடந்த அந்த பூனை சரியாக தெரியவில்லை.. அதனால் டார்ச் அடித்து உற்று பார்த்தார்.. அடுத்த செகண்ட் சித்தராஜ் அலறியதில் அந்த ஊரே அதிர்ந்தது.. அது பூனையே இல்லை.. சிறுத்தையாம்!

கிணற்றில் பாறை இடுக்கில் பதுங்கி கொண்டு, சித்தராஜை பார்த்து உறுமியது. ஆனாலும் வேறு வழி தெரியாததால், சித்தராஜ் தைரியமாக செயல்பட்டார்.. அந்த கூண்டு 2 பிரிவாக இருந்ததால், கூண்டின் ஒரு பகுதியை திறந்துவிட்டார்.. ஆனால் இருட்டாக இருந்ததால் சிறுத்தை அந்த கூண்டுக்குள் வரவே இல்லை.. அதனால் சித்தராஜை மட்டும் மேலே பத்திரமாக தூக்கிவிட்டனர்.

சச்சின் பைலட் கோஷ்டி மீது தகுதி நீக்க நடவடிக்கை- உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் அப்பீல்சச்சின் பைலட் கோஷ்டி மீது தகுதி நீக்க நடவடிக்கை- உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் அப்பீல்

இதற்கு பிறகு மறுநாள் காலைதான், ஒரு வலையை வைத்து, அந்த வலைக்குள் இறைச்சியை வைத்து, ஒரு சிசிடிவி கேமிராவையும் அதனுடன் பொருத்தி, மெல்ல கிணற்றுக்குள் இறக்கினர்.. இறைச்சியை பார்த்ததும் சிறுத்தை பாய்ந்து வந்தது.. அப்படியே வலையை அலோக்காக தூக்கிவிட்டனர் வனத்துறையினர்... மேலே வந்ததும் அந்த சிறுத்தைக்கு கோபம் வந்துவிட்டது.

4 வயசுதான் ஆகிறதாம்.. பெண் சிறுத்தை அது.. இப்படி இறைச்சியை வைத்து ஏமாற்றிவிட்டார்களே என்று நினைத்து அங்கிருந்தோர் மீது கூண்டுக்குள் இருந்தே பாய்ந்தது.. அதனால் அதற்கு காயம்தான் ஏற்பட்டது.. ஆனால் பெரிய காயங்கள் இல்லை.. சிறுத்தை இப்போது நன்றாக இருக்கிறதாம்.. ஆனால், துணிச்சல் மிகுந்த ஹீரோ சித்தராஜ் எப்படி இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

English summary
forest official enters 100 feet deep well to rescue leopard near karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X