பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு...கர்நாடகா அரசு வழங்கி இருக்கும்...ரூ. 60 லட்சம் வால்வோ கார்!!

Google Oneindia Tamil News

பெங்களூரு: முன்னாள் பிரதமரும் ராஜ்ய சபா உறுப்பினருமான ஹெச்.டி. தேவ கவுடாவுக்கு கர்நாடகா அரசு ரூ. 60 லட்சம் மதிப்பிலான வால்வோ கார் வழங்கியுள்ளது. ராஜ்ய சபா உறுப்பினருக்கு வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலையை விட மூன்று மடங்கு மதிப்பில் இந்தக் கார் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு நிதிச் சிக்கலில் இருக்கும் நிலையிலும், கொரோனா கால கட்டத்தில் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை தொலைத்துக் கொண்டு இருக்கும்போது, இவ்வளவு அதிகமான விலையில் மாநில அரசு கார் வழங்கி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Former Prime Minister RS member H D Deve Gowda gets Rs 60 lakh worth car

அமைச்சகர்கள், லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சேவைகள் துறை கார் வாங்கும்போது, ரூ. 22 லட்சத்தை தாண்டக் கூடாது. இதுவே மாநில முதல்வருக்கு வாங்கும்போது விலை கட்டுபாடு இல்லை. ஆனால், முன்னாள் பிரதமருக்கு கார் வழங்கும்போது இந்தக் கட்டுப்பாடுகளை பார்க்கவேண்டியது இல்லை, தளர்த்திக் கொள்ளலாம் என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வால்வோ காரின் விலை வரியுடன் சேர்த்து ரூ. 76 லட்சம். ஆனால், அரசுகளுக்கு என்று வரும்போது வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. வரி இல்லாமல் ரூ. 60 என்ற விலையில் தேவ கவுடாவுக்கு இந்தக் கார் வாங்கப்பட்டுள்ளது.

போலீசுக்கே தண்ணி காட்டும் போலீசுக்கே தண்ணி காட்டும் "எழிலரசி".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்

இந்தக் காருக்கான அனுமதியை மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவே கொடுத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு பிரதமர் என்ற முறையிலும், மூத்த அரசியல் தலைவர் என்ற முறையிலும் இவருக்கு முதல்வர் எடியூரப்பா இந்தக் காரை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டு ஃபார்ச்சூனர் கார்களும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரும் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது.

English summary
Former Prime Minister RS member H D Deve Gowda gets Rs 60 lakh worth car
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X