பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைகளுக்கு தமிழ் படிக்க தெரியவில்லையே என்று ஏக்கமா? இலவச ஆன்லைன் வகுப்பு இருக்கே.. கவலை ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ் அறக்கட்டளை-பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் அறக்கட்டளை-பெங்களூரு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாதகாலத்திற்கான இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Free online Tamil class for students

தமிழறிஞர் பொள்ளாச்சி நசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல்முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் 28 நாட்களில் அடிப்படை தமிழ் கற்றுத்தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்க்கற்றல் வகுப்புகள், பிப்.1 முதல் 28-ஆம் தேதிவரையில் நடக்கவிருக்கிறது.

ஜூம்(குவியம்) வழியாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ் வகுப்பில் அறநெறியை கற்பிக்கும்கதைகள், நாபிறழ் பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத்தரப்படுகின்றன.

2016-2021, 5 ஆண்டுகளில் இணையவழி வங்கி பரிவர்த்தனையில் ரூ.846.97 கோடி முறைகேடு: மத்திய நிதி அமைச்சகம்2016-2021, 5 ஆண்டுகளில் இணையவழி வங்கி பரிவர்த்தனையில் ரூ.846.97 கோடி முறைகேடு: மத்திய நிதி அமைச்சகம்

இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில் 100 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை https://forms.gle/QFTjgKdPjmrNUhWWA என்ற கூகிள்ஃபார்மில் ஜன‌.30-ஆம் தேதி நள்ளிரவு12 மணிக்குள் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும். கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Applications are welcome for the online free Tamil learning class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X