பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த சடங்கும் இல்லை.. மக்களுக்கும் அனுமதியில்லை: தகனம் செய்யப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல்! காரணம் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் மரணம்- வீடியோ

    பெங்களூரு: நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் நேற்று காலமானார். அவரது உடல் எந்த சடங்கும் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டது. பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

    நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். 1938ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    தமிழில் காதலன், ரட்சகன், காதல்மன்னன், ஹேராம், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.

    கவுரவித்த மத்திய அரசு

    கவுரவித்த மத்திய அரசு

    கர்னாடக அரசின் ஞானபீட விருதை பெற்றுள்ளார் கர்னாட். கலைத்துறையில் இவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்முபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துத்துள்ளது.

    மனைவி, மகன், மகள்

    மனைவி, மகன், மகள்

    81 வயதான கிரிஷ் கர்னாட், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலமானார். அவருக்கு சரஸ்வதி கணபதி என்ற மனைவி ரகு அமே என்ற மகன், ஷால்மாலி ராதா என்ற மகளும் உள்ளனர்.

    மக்களுக்கும் அனுமதியில்லை

    மக்களுக்கும் அனுமதியில்லை

    இந்நிலையில் எந்த சாஸ்திர சம்பிராதயத்துக்கும் இடம் கொடுக்காமல், கிரிஷ் கர்னாட்டின் உடல் எந்த சடங்கும் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டுள்ளது. கிரிஷ் கர்னாட்டின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    யாருக்கும் அனுமதியில்லை

    யாருக்கும் அனுமதியில்லை

    எந்த ஆரவாரமும் இன்றி பெங்களூரின் கிழக்கு பகுதியில் உள்ள களப்பள்ளி மின் மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே உடன் சென்றனர். அவரது ரசிகர்களோ போலீஸ் பாதுகாப்பு வாகனங்ளோ அவரது உடல் கொண்டு செல்லப்படும் போது உடன் செல்லவில்லை.

    அரசு மரியாதை - மறுப்பு

    அரசு மரியாதை - மறுப்பு

    கிரிஷ் கர்னாட்டின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

    அஞ்சலிக்கு அனுமதியில்லை

    அஞ்சலிக்கு அனுமதியில்லை

    கிரிஷ் கர்னாட் இறந்த செய்தியை கேட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். ஆனால் அவர்களை கிரிஷ் கர்னாட்டின் உடலை பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்களின் அஞ்சலிக்காவுக்காவும் அவரது உடலை வைக்கவில்லை.

    கிரிஷ் கர்னாட்டின் கடைசி ஆசை

    கிரிஷ் கர்னாட்டின் கடைசி ஆசை

    கிரிஷ் கர்னாட் விருப்பப்படியே அவரது உடல் எந்த சடங்கும் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். கிரிஷ் கர்னாட்டின் கடை ஆசைப்படியே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    மதிப்பளித்த அரசு

    மதிப்பளித்த அரசு

    தனது இறப்புக்கு பிறகு எந்த சாஸ்திர சம்பிரதாய சடங்குகளையும் செய்யக்கூடாது என கூறியிருந்தார் கிரிஷ் கர்னாட், அதன்படியே அவரது உடல் எந்த சடங்கும் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டது. அவரது கடைசி ஆசைக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் முடிவை கைவிட்ட அரசு, அவரது குடும்பத்தார் விருப்பப்படியே தகனம் செய்ய அனுமதித்துள்ளது.

    மூன்று 3 நாள் துக்கம்

    மூன்று 3 நாள் துக்கம்

    கிரிஷ் கர்னாட்டின் மரணத்தால் கர்நாடக அரசு நேற்று விடுமுறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் நாளை மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கிரிஷ் கர்னாட் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Girish Karnad's mortal cremated quietly. No rituals and customs were conducted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X