பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூர் ரயில் நிலையத்தில் தோன்றிய தமிழ்.. கொந்தளித்த கன்னடர்கள்! சுந்தர் பிச்சை வரை போன பஞ்சாயத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Google map shows KSR in tamil | பெங்களூர் ரயில் நிலையத்தில் தமிழ்! சுந்தர் பிச்சை வரை போன பஞ்சாயத்து

    பெங்களூர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திதான் தேசிய மொழியாகும் தகுதி கொண்டது என்று சொன்னாலும் சொன்னார், இந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் சமீபத்தில் தான் கன்னட அமைப்புகள் மாபெரும் போராட்டங்களை நடத்தியிருந்தன.

    இந்த நிலையில் தங்களது முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் தமிழ் புகுத்தப்பட்டு விட்டதாக கூறுகின்றனர் கன்னடர்கள்.

    பெங்களூர் நகரத்தில் உள்ள முக்கியமான ரயில்வே நிலையம் கிராந்திவீரா சங்கொலி ராயண்ணா. இந்த ரயில் நிலையத்தின் பெயர்தான் ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழிலும் காட்டுகிறதாம்.

    Google maps gaffe shows a Bengaluru railway station name in Tamil

    பெங்களூர் சிட்டி ரயில் நிலையம் என்று பரவலாக அறியப்படும் இந்த ரயில் நிலையத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த சங்கொலி ராயண்ணா பெயர் சூட்டப்பட்டது. கிராந்தி வீரா என்ற பட்டம் புரட்சித்தலைவர் என்பது அதற்கு ஈடானது. எனவே புரட்சித்தலைவர் சங்கொலி ராயண்ணா என்பது பொருத்தமாக இருக்கும்.

    ஆனால் சமீபத்தில் கூகுள் மேப் மூலமாக ரயில் நிலையத்தை தேடியவர்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம் கிடைத்தது. வழக்கமாக தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் என்றால் ஆங்கிலம் மற்றும் தமிழில் கூகுள் மேப் அந்த இடம் பற்றி காட்டும்.

    கர்நாடகாவில் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் காட்டும். ஆனால் இந்த முக்கியமான ரயில் நிலையத்திற்கு ஆங்கிலத்துடன் தமிழில் இடத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

    'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடந்து 2 நாள்தான் ஆகிறது.. இம்ரானை பார்த்ததும் ட்ரம்ப் இப்படி மாறிட்டாரே!'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடந்து 2 நாள்தான் ஆகிறது.. இம்ரானை பார்த்ததும் ட்ரம்ப் இப்படி மாறிட்டாரே!

    ஏற்கனவே அவுங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு.. அதாங்க காவிரி பிரச்சனை இருக்குது. பெங்களூரில் பொது இடங்களில் தமிழ் பெயர்களை எழுதுவது கூட முடியாத விஷயம். அப்படியான ஒரு இடத்தில் ரயில் நிலையத்தில் கன்னடத்திற்கு பதில், தமிழில் கூகுள் மேப் சுட்டிக்காட்டியதை பார்த்ததும் சும்மா இருப்பார்களா பொங்கி விட்டனர்.

    சில நெட்டிசன்கள் ஒரு படி மேலே போய், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு, டேக் செய்து ட்விட்டரில் தங்களது குமுறலை கொட்டித் தீர்த்து விட்டனர். உடனடியாக தமிழ் பெயரை மாற்ற வேண்டும் என்று கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர்.

    நேற்று இவ்வாறு இணையதளம் முழுக்க பரபரப்பு நிலவி வந்த நிலையில், ஒரு வழியாக கூகுள் தற்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ரயில் நிலையத்தின் பெயர் இருக்கும்படியாக மாற்றியுள்ளது. இப்போதுதான் கன்னடர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    English summary
    Google Maps is intended to be used as a way for people to explore the world as though they are standing in that very location no matter where they are in the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X