பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்திற்கான உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்திற்கான உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 5,762 பஞ்சாயத்திற்கான உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும். கிட்டத்தட்ட 3 கோடி வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் 92,000 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 30ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Gram Panchayat Election In Karnataka Voting in First Phase

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தகுந்த அளவில் வெற்றி பெற்றாலும் கேரளாவில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சாதிக்குமா? சறுக்குமா என்பதை 30ம் ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 '10 வருட திருமண உறவு ஓவர்' - திரிணாமுல் காங்.கில் சேர்ந்த மனைவியை டைவர்ஸ் செய்யும் பாஜக எம்பி! '10 வருட திருமண உறவு ஓவர்' - திரிணாமுல் காங்.கில் சேர்ந்த மனைவியை டைவர்ஸ் செய்யும் பாஜக எம்பி!

ஏற்கனவே 4000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பல இடங்கள் அதிக ஏலம் கொடுத்து பதவியை ஏலம் விட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து நன்கு விசாரணை நடத்திய பின்னரே முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Voting for the first phase panchayat polls in Karnataka today . Second phase election will be held on Sunday Over 5700 gram panchayat across all districts of the state will see voting, with counting and results on December 30. The first phase on Tuesday will see voting across the state for over 48,000 of the seats in over 3000 panchayats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X