• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் அக். 17ல் ஆரம்பம்.. பிரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் கூடுதல் சலுகை

பெங்களூர்: விழாக்காலத்தையொட்டி, 'அமேசான் இந்தியா' தனது கிரேட் 'இந்தியன் ஃபெஸ்டிவல்' (Great Indian Festival) விற்பனையை, அக்டோபர் 17ம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதேநேரம், பிரைம் உறுப்பினர்களுக்கு, 24 மணி நேரத்திற்கு முன்பாகவே, அதாவது அக்டோபர் 16ம் தேதியே, விற்பனை துவங்கி விடும்.

6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், இந்த விற்பனையின்போது கோடிக்கணக்கான பொருட்களை வழங்குவார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் (SMBகள்) 4 கோடி தயாரிப்புகளையும், 100 நகரங்களில் 20,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகளின் தயாரிப்புகளை வாங்கலாம்.

Great Indian Festival 2020 sale to kick off Oct 17, Prime Members get 24 hours early access

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின்போது டீல்கள் மற்றும் தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அமேசான் பல்வேறு மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் ஆஃபர்களை வழங்க உள்ளது.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அமேசான் இந்தியா சேவையளிக்கிறது:

வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான ஆறு மொழிகளில் ஒன்றான ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் ஷாப்பிங் செய்யலாம். ஸ்மார்ட்போன்கள், பெரிய உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், வீடு மற்றும் சமையலறை தயாரிப்புகள், பேஷன் & அழகு, மளிகை மற்றும் பல வகைகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான பிரிவுகளிலும் அமேசான் டீல்களை வழங்குகிறது.

சிறந்த பிராண்டுகளிலிருந்து 900 புதிய தயாரிப்புகள்:

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது சிறந்த பிராண்டுகளிலிருந்து 900 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில் தீபாவளி வரை, நவராத்திரி, துர்கா பூஜை, திருமண சீசன் மற்றும் டான்டெராஸ் ஆகியவற்றுக்கான சிறப்புத் தேர்வுகளை டாபிகல் ஸ்டோர்களில் இருந்து ஷாப்பிங் செய்ய முடியும். கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ​​இந்த ஆண்டு லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், (SMBகள்) வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான செலக்ஷன்களை வழங்க உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்களின் தொழில் வளர்ச்சி பெற இது உதவும்.

ரிவார்டுகள், ஆபர்கள் மற்றும் டீல்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

உள்ளூர் கடைகள், அமேசான் லாஞ்ச்பேட், அமேசான் சாஹெலி மற்றும் அமேசான் கரிகர் போன்ற பல்வேறு புரோக்ராமின் கீழ் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆயிரக்கணக்கான, அமேசான் விற்பனையாளர்களிடமிருந்து தனித்துவமான தயாரிப்புகளை வாங்கவும், டீல்கள் / சலுகைகளை அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அமேசான் வாடிக்கையாளர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் 10 சதவிகித உடனடி தள்ளுபடி பெறும் வாய்ப்பு இந்த விற்பனையின்போது தரப்படும்.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ​​சாம்சங், ஒன்பிளஸ், ஆப்பிள், போட், ஜேபிஎல், சோனி, சென்ஹைசர், டாபர், எல்ஜி, ஐஎஃப்பி, ஹைசென்ஸ், டைட்டன், மேக்ஸ் ஃபேஷன், பிபா, ஸ்பைக்கர், பானாசோனிக், யுரேகா ஃபோர்ப்ஸ், வோஷர், லக்மே, பிக்மஸ்குல்ஸ், காஸ்மிக் பைட், மேகி, டைட், ரியல்மீ, மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ், வெஸ்ட்லேண்ட், ஹார்பர், ஜியோமி, ஒப்போ, சான்யோ, கோப்ரோ, ஹானர், போஷ், அமாஸ்ஃபிட், பீட்டர் இங்கிலாந்து, லெவிஸ், ரிவர், அமேசான் பேசிக்ஸ் , அர்ப்ன், பயோடிக், பான் மெக்மில்லன், கார்மேட், பைக் பிளேஸர் மற்றும் பல.

Great Indian Festival 2020 sale to kick off Oct 17, Prime Members get 24 hours early access

சில புதிய அறிமுகங்களும் கொண்டுவரப்படுகிறது. புதிய அமேசான் எக்கோ டாட், கடிகாரத்துடன் எக்கோ டாட், அமேசான் எக்கோ, ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட்டுடன் ஃபயர் டிவி ஸ்டிக் லைட் ஆகியவையும் இதில் அடஙஹ்கும். லேப்டாப்புகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள், பர்னிச்சர்கள், ஹெட்ஃபோன்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள், வேலை / படிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள மிகப்பெரிய பிராண்டுகள், ஒவ்வொரு நாளும் புதிய டீல்களை அறிவிப்பார்கள். எனவே, வாடிக்கையாளர்கள் முடிவில்லாத உற்சாகத்தை அனுபவிக்க முடியும்.

ஏர் ப்யூரிபையர்கள், டி.வி.க்கள், வாஷிங் மெஷின்கள், டிஷ்வாஷர்கள் மற்றும் பலவற்றை வாங்க முடியும். அவர்கள் பெரிய அளவிலான ஆடை, பேஷன் அணிகலன்கள் மற்றும் அழகு சாதனங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

கிரேட் இந்தியா திருவிழா குறித்து அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில், "இந்த ஆண்டின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், எங்கள் விற்பனையாளர்களுக்கும், பங்காளர்களுக்கும் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை சென்றடைய ஒரு வாய்ப்பாகும். எங்கள் விற்பனையாளர்கள் உற்சாகமாக உள்ளனர், மேலும் இது அவர்களின் வணிகத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள். எங்கள் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, பண்டிகை காலங்களில் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் பாதுகாப்பாக வழங்க உதவுவதே எங்கள் நோக்கம். " என்றார்.

நீல்சனின் சமீபத்திய சர்வேப்படி, Amazon.in நிறுவனத்தில் 85% க்கும் மேற்பட்ட SMB விற்பனையாளர்கள், தங்களால், புதிய வாடிக்கையாளர்களை அணுகவும், விற்பனையை அதிகரிக்கவும் முடியும் என்று, எதிர்பார்க்கின்றனர். 74% க்கும் அதிகமான விற்பனையாளர்கள் வணிகத்தை மீட்டெடுக்க இந்த ஃபெஸ்டிவல் உதவும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், 78% விற்பனையாளர்கள், பொருட்கள் அதிகம் பேரை சென்றடையும் என்று நம்புகிறார்கள்.

பாதுகாப்பான மற்றும் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அமேசான் அதன் விநியோக உள்கட்டமைப்பை 200 டெலிவரி நிலையங்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான சப்ளை பார்ட்னர்களை நெட்வொர்க்கில் சேர்த்துள்ளோம்.

 சென்னையில் 21% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னையில் 21% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

15 மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட புல்ஃபில்மென்ட் மையங்களுடன் அமேசான் தனது புல்ஃபில்மென்ட் தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. நாட்டின் தொலைதூர பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய 32 மில்லியன் கன அடிக்கு மேல் சேமிப்புத் திறனை வழங்குகிறது. மேலும், அமேசான் இந்தியா 5 புதிய சார்ட் மையங்களை கொண்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போதுள்ள 8 மையங்களை விரிவுபடுத்தவும் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X