பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குமாரசாமிகாரு "யூ டூ" இன் "மீ டூ" சூன்.. பாஜக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    குமாரசாமியும் மீ டூ விவகாரத்தி சிக்குவார் - பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்

    பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமியும் விரைவில் மீ டூ விவகாரத்தில் சிக்குவார் என பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா புது குண்டை வீசியுள்ளார்.

    மீ டூ விவகாரம் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்கள் குறித்து கூறி வருகின்றனர். இதில் ஏராளமான பிரபலங்கள் சிக்கி வருகின்றனர்.

    ஷிமோகாவில் பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தந்தை எஸ் பங்காரப்பா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறி வருகிறார். அவர் அரசியல் செய்யட்டும். ஆனால் தனிமனித குற்றச்சாட்டுகள் கூடாது.

    [தினகரன் ஒரு மண் குதிரை.. அவரை நம்பி ஆற்றில் இறங்கலாமா.. அதான் அல்வா கொடுத்துவிட்டார்- ஜெயக்குமார்]

    புகார்

    புகார்

    அவர் இது போல் தொடர்ந்து என் தந்தையை பற்றியோ அல்லது என்னை பற்றியோ தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் குமாரசாமி விரைவில் மீ டூ புகாரில் சிக்குவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது புகார் கொடுக்க முன்வருவார்.

    பெண் யார்

    பெண் யார்

    குமாரசாமியால் பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குமாரசாமி அவருடைய முதல் மனைவி அனிதாவை பஞ்சாயத்து தலைவர் ஆகியுள்ளார். தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தருகிறார்.

    போட்டியிட வையுங்கள்

    போட்டியிட வையுங்கள்

    அதுபோல் ராதிகாவையும் அவர் ஒரே மாதிரி நடத்த வேண்டும் இல்லையா. அவரை அவரது குடும்ப உறுப்பினராக அறிமுகப்படுத்தாதது ஏன். அவரையும் பிரசாரத்துக்கு அழைத்து செல்லுங்கள். ஹாசனிலோ அல்லது வேறு தொகுதியிலோ போட்டியிட வையுங்கள்.

    அவசர சட்டம்

    அவசர சட்டம்

    எனது தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டுமானால் குமாரசாமி மாண்டியா, பெங்களூர் மற்றும் ராம்நகரில் பயன்படுத்தட்டும். காவிரி விவகாரம் தொடர்பாக எனது தந்தை அவசர சட்டத்தை கொண்டு வந்தார். எனவே எனது தந்தையின் பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது என்றார்.

    English summary
    BJP MLA Kumar Bangarappa says that Karnataka CM H.D.Kumarasamy will face Me Too allegations soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X