பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலா சீதாராமன் எங்க மாநிலத்து பிரதிநிதி.. அள்ளி கொடுப்பார்.. குமாரசாமி அதிரடி டிவீட்!

புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து குமாரசாமி ட்வீட் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

பெங்களூரு: நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய நிதியமைச்சராகியிருக்கிறார் என்று செய்திகள் பரபரக்கும் நிலையில் அவர் எங்க மாநிலத்துக்காரர், எங்களுக்கு நிறைய நிதி கொடுப்பார் என கர்நாடக முதல்வர் எச். டி. குமாரசாமி கூறியிருக்கிறார்.

சுதந்திர இந்தியாவில், முழு அளவில் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்ற முதல் பெண், தமிழகத்திலிருந்து நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்துள்ள 6வது தலைவர் என்ற பெருமையுடன் நிர்மலா சீதாராமன் தனது புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

HD Kumarasamy has praised Finance Minister Nirmala Sitharaman

தமிழகத்திலிருந்து வந்துள்ள நிதியமைச்சர் என்று தமிழக பாஜகவினரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நிர்மலாவை தங்களது மாநிலத்துக்காரர் என்று கூறியிருக்கிறார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சீட்டுக்கு பெரும் அடிதடி.. ராஜ்யசபா தேர்தலிலாவது அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ஒரு சீட்டுக்கு பெரும் அடிதடி.. ராஜ்யசபா தேர்தலிலாவது அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இதுதொடர்பாக குமாரசாமி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், "நான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தேன். நமது மாநிலத்துப் பிரதிநிதி நிதியமைச்சராக பொறுப்புக்கு வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையான ஒன்றாகும். கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

நம்ம மாநில முதல்வர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தினாரா என்று தெரியவில்லை. ஆளுக்கு முந்தியாக குமாரசாமி வாழ்த்து தெரிவித்து துண்டு போட்டு விட்டாரே.. என்னதான் சொல்லுங்க, குமாரசாமிக்கு ரொம்பத்தான் சமத்து.

English summary
Kumarasamy has praised Nirmala Sitharaman that, "It's a proud moment for the state to see our representative assuming the responsibility of the finance portfolio.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X