பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூருவில் இடியுடன் கனமழை- காலை முதல் வெளுத்து வாங்குகிறது

Google Oneindia Tamil News

பெங்களூரு: கோடை வெயில் உச்சத்தைத் தொட்ட நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.

Recommended Video

    பெங்களூருவில் இடியுடன் கனமழை- காலை முதல் வெளுத்து வாங்குகிறது - வீடியோ

    மே 4- ந் தேதி முதல் அக்னி வெயில் காலம் தொடங்குகிறது. தற்போது பல இடங்களில் வெயில் உக்கிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பல இடங்களில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மழையும் பெய்து வருகிறது.

    Heavy rain lashes Bengaluru from morning

    பெங்களூருவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று காலை 5.30 மணி முதல் பெங்களூருவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    Heavy rain lashes Bengaluru from morning

    பெங்களூருவின் மைசூர் சாலை, கெங்கேரி, உத்தரஹல்லி, ஜெயநகர், மல்லேஸ்வரம், விஜயநகர், மெஜஸ்டிக் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பெங்களூருவில் அதிகபட்சமாக 7 செமீ மழை பதிவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    சென்னைவாசிகளே! 6 மாதங்களுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காதாம்.. கை கொடுத்தது கோடை மழை சென்னைவாசிகளே! 6 மாதங்களுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காதாம்.. கை கொடுத்தது கோடை மழை

    தற்போது லாக்டவுன் காலம் என்பதால் நெட்டிசன்கள் வீடுகளில் இருந்தபடியே மழையை படமெடுத்தும் வீடியோ பதிவாக்கியும்சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கர்நாடகாவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

    Heavy rain lashes Bengaluru from morning

    இதேபோல் மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களிலும் இன்று முதல் மே 1-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கனாவிலும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Heavy rain lashes Bengaluru from morning
    English summary
    HeavyRain lashes parts of the Bengaluru city on Wednesday morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X