பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக சட்டசபையில் ஆரம்பித்தது நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு.. கட்சிகள் பலம் இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது கர்நாடக அரசு

    பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கையைத் தீர்மானத்தின், மீதான வாக்கெடுப்பு குமாரசாமி அரசு சந்தித்து வரும் நிலையில், கட்சிகளின் பலம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்:

    மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்டது கர்நாடக சட்டசபை. 37 எம்எல்ஏக்கள் பலம் கொண்டது மதசார்பற்ற ஜனதா தளம். அதில் 3 பேர் இப்போது ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது அக்கட்சியின் பலம் 34 ஆக உள்ளது.

    Here is the full detail of Karnataka assembly total strength

    காங்கிரஸ் கட்சியில் 79 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அதன் பலம் 67 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

    எனவே, கூட்டணி கட்சிகளின் பலம் 99 எம்எல்ஏக்கள் ஆக உள்ளது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இருதரப்புக்கும், சரிசமமான வாக்குகள் பதிவானால், அப்போது சபாநாயகர் தனது வாக்கை பதிவு செய்யலாம்.

    எனவே அதையும் சேர்த்தால் ஆளும் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் பலமுள்ளது. அதேநேரம் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இது தவிர இரு சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.

    தற்போதுள்ள எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 103 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் ஆளும் கட்சிக்கு அத்தனையும் எம்எல்ஏக்கள் இல்லை என்பதும், பாஜகவுக்கு பெரும்பான்மை க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், பதவியை ராஜினாமா செய்யாமலும் சட்டசபைக்கு வராமலும் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளனர். எனவே கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பலம் 97 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Here is the full detail of Karnataka assembly total strength and party wise MLA strength this is important for Karnataka trust vote.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X