உயிரிழக்கும் கடைசி நொடியில் பிரசவித்த பாம்பு.. வயிற்றில் இருந்து வந்த 50 குட்டிகள்.. ஷாக் நிகழ்வு
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் உயிரிழந்த பாம்பின் வயிற்றில் இருந்து பாம்பு குட்டிகள் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் கண்டறியப்படும் உயிரினமாகப் பாம்பு உள்ளது. அண்டார்டிக்கா தவிர உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன.
“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?
10 செமி நீளம் கொண்ட சிறிய பாம்பு முதல் மிகவும் நீளமான மலைப்பாம்புகள் வரை உலகெங்கும் சுமார் 4000க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்டறியப்படுகிறது. இந்தோ பசிபிக் நாடுகளில் இவை அதிகம் காணப்படும்.

விஷத்தன்மை கொண்ட பாம்புகள்
குறிப்பாக இந்தியாவில் பாம்புகள் அதிகம் இருக்கிறது. நமது நாட்டில் மட்டும் சுமார் 270க்கும் மேற்பட்ட வகை பாம்புகள் உள்ளன. இதில் மிகவும் ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகளை ஆய்வாளர்கள் Big Four என்று அழைக்கிறார்கள். இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு, கண்ணாடி விரியன் ஆகியவற்றை தான் ஆய்வாளர்கள் Big Four என்று அழைக்கிறார்கள்.

கர்நாடக கிராமம்
இப்படிப்பட்ட அதிக விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு தான், கர்நாடகாவில் உயிரிழக்கும் நிலையில் 50 குட்டிகளைப் போட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா அருகே உள்ள ஹம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர். இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகே பெரிய கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதைப் பார்த்துள்ளார். உடனே பதற்றமடைந்த அவர், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.

திடீரென சீற்றம்
அப்போதும் கூட பாம்பு அசையாமலேயே இருந்துள்ளது. இதனால் பாம்பு உயிரிழந்துவிட்டதாக அவர்கள் கருதி உள்ளனர். இருப்பினும், பாம்பின் வயிற்றுப் பகுதி பெரிதாக இருந்துள்ளது. இதையடுத்து தடிகளை கொண்டு பாம்பின் வயிற்றுப் பகுதியைக் குத்தி உள்ளனர். அப்போது பாம்பு திடீரென சீறியுள்ளது. உயிரிழந்துவிட்டதாகக் கருதிய பாம்பு திடீரென சீறியதால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகளில் ஒருவர் பாம்பைக் கல்லைக் கொண்டும் மற்றவர்கள் தடிகளைக் கொண்டும் வயிற்றுப் பகுதியில் தாக்கி உள்ளனர்.

50 குட்டிகள்
அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் பாம்பின் வயிற்றுப் பகுதியிலிருந்து பாம்பு குட்டிகள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து நின்றனர். அந்த பாம்பின் வயிற்றில் இருந்து மட்டும் சுமார் 50 பாம்பு குட்டிகள் வெளியே வந்துள்ளது.

இயல்பு தான்
இது குறித்து தாவங்கரே பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் எஸ் சிசுபாலா கூறுகையில், "நாகப் பாம்புகள் உள்ளிட்ட பெரும்பாலான பாம்புகள் முட்டைகளைத் தான் இடும். ஆனால், இந்த கண்ணாடி விரியன் பாம்புகள் நேரடியாகக் குட்டிகளைப் போடும். ஒரே நேரத்தில் இவை 50-70 குட்டிகளைப் போடும். ஆனால், அதில் 5-10% பாம்புகள் மட்டுமே உயிர் பிழைக்கும். மற்றவை இறந்துவிடும். பாம்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே கிராம மக்கள் பாம்பைக் கொன்றுள்ளனர்" என்றார்.