பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே வாட்ஸ் ஆப் மெசேஜ்.. பெங்களூரில் தவறுதலாக இடிக்கப்பட்ட 300 இஸ்லாமிய குடும்பத்தின் வீடுகள்.. ஷாக்!

பெங்களூரில் 300 இஸ்லாமிய குடும்பங்களின் வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என இடிக்கப்பட்ட தற்காலிக கூடாரங்கள்

    பெங்களூர்: பெங்களூரில் 300 இஸ்லாமிய குடும்பங்களின் வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது. நாடு முழுக்க இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணியில் அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் இந்த சட்டத்தை பெரிய அளவில் போராட்டங்களை சந்தித்து வருகிறது. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் ஏற்படும்.

    Rajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்Rajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்

    பெங்களூர்

    பெங்களூர்

    இந்த நிலையில் தற்போது பெங்களூரில் இருக்கும் இஸ்லாமியர்கள், அம்மாநில பாஜக அரசால் குறி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள பெலந்தூர் ஏரி அருகே உள்ள இஸ்லாமியர் வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. அங்கிருக்கும் 300 வீடுகள் இப்படி இடிக்கப்பட்டது.

    என்ன வீடுகள்

    என்ன வீடுகள்

    இந்த வீடுகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. இவர்கள் எல்லோரும் வங்கதேசத்தை சேர்ந்தவர். இங்கே முறையின்றி குடியேறி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இதனால் இவர்களின் வீடுகளை இடித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றியதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

    ஆனால் ஆதார்

    ஆனால் ஆதார்

    ஆனால் இவர்கள் எல்லோரிடமும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருந்துள்ளது. நாங்கள் இந்தியர் என்பதற்காக எல்லா ஆதாரமும் இருக்கிறது. ஆனால் எங்கள் வீடுகளை இடித்துள்ளனர்.

    கர்நாடக மக்கள்

    கர்நாடக மக்கள்

    இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. நாங்கள் எல்லோரும் கர்நாடக மக்கள். எங்களுக்கு வங்கதேசம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. சில வடஇந்தியர்களும் இங்கே இருக்கிறார்கள். அதோடு, தமிழகத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் சிலரும் கூட இங்கே இருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய வீடுகளையும் இடித்து உள்ளனர் என்கிறார்கள் வீட்டை இழந்த அப்பாவி மக்கள்.

    பரிசோதனை

    பரிசோதனை

    இந்த நிலையில் ஆவணங்களை பரிசோதனை செய்த அதிகாரிகள், அவர்கள் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர். தவறான தகவல் காரணமாக இப்படி நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வீடுகளை உடமைகளை இழந்த மக்கள் தற்போது இருப்பிடம் இன்றி அங்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    பாஜக வாட்ஸ் ஆப்

    பாஜக வாட்ஸ் ஆப்

    பாஜகவின் வாட்ஸ் ஆப் குழுக்களில் இந்த பெலந்தூர் ஏரி குறித்து தகவல்கள் வந்துள்ளது. அங்கு வங்கதேச மக்கள் இருக்கிறார்கள் என்று பொய்யான பார்வேர்ட் செய்திகள் வந்துள்ளது. இதனால் வேகம் எடுத்த போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து இரண்டு நாளில் 300 குடும்பத்தை நடு தெருவில் நிற்க வைத்துள்ளனர்.

    மாற்று இடம்

    மாற்று இடம்

    இவர்களுக்கு இன்னும் மாற்று இடங்கள் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிஏஏ, என்ஆர்சி வந்தால், இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அச்சம் எழுந்தது. தற்போது அதேபோல் முதல் கட்டமாக, இஸ்லாமிய மக்கள் பாஜக ஆளும் கர்நாடகாவில் குறி வைக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Homes of 300 Muslim families razed down by Bangalore Municipality after Bangladeshi Whats app Forward in BJP groups.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X