பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூர் தீ விபத்து.. துப்பாக்கியால் சுட்டு கார்களை நகர்த்திய பாதுகாப்பு படை.. டமால், டமால் சத்தம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூர் விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து..வீடியோ

    பெங்களூர்: பெங்களூர் விமான கண்காட்சி நடைபெறும் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 300க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

    விமான கண்காட்சி நடைபெறும் எலகங்கா, பகுதி முழுக்க புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப பட்ட கார்களில் தீ பரவுவதால் டமால், டமால் என்று சத்தம் எழுந்து பீதி நிலவுகிறது.

    How fire accident took place at Bangalore Air Show?

    வாகன நிறுத்துமிடத்தில் சுற்றியும் சுமார் 400 ஏக்கரில் புற்கள் பரந்து வளர்ந்துள்ளன. 3 அடி முதல் 4 அடி வரை காய்ந்த புற்கள் அங்கு வளர்ச்சியடைந்து, காணப்படுகிறது.

    வெப்பத்தின் காரணமாக புற்கள் காய்ந்த நிலையில் இருந்ததால் தீ வேகமாக பரவியுள்ளது. புற்களை அகற்றுவதற்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்படுவது வழக்கம்.

    புற்களை அகற்ற வழக்கமாக வழங்கப்படும், ஒப்பந்ததாரருக்கு மாற்றாக இம்முறை புதிதாக ஒப்பந்ததாரருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த தொழிலுக்கு புதிது என்று கூறப்படுகிறது.

    எனவே புற்களை சரியாக அகற்றவில்லை. வெட்டிய புற்கள் அங்கேயே கிடந்துள்ளன. தினசரி சுமார் 8 லட்சம் லிட்டர் அளவுக்கு தண்ணீரை பயன்படுத்தி அந்த தரைப்பகுதியை குளிர்விக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எனவே தான் புல்வெளியில் ஏற்பட்ட தீ மளமளவென வாகனங்கள் நிறுத்தப்பட்டு இடத்திற்கும் பரவியுள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்டுள்ள வாகனங்கள் என்பதால் தீயை அணைப்பதில் தீயணைப்பு படை வீரர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென பரவியதால் அந்த பகுதி முழுக்க புகை மூட்டம் காணப்பட்டுகிறது.

    கண் முன்னால் கார் எரிந்ததை பார்த்து கார் உரிமையாளர்கள் கதறி அழுதனர். பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, கார் கண்ணாடிகளை துப்பாக்கியால் சுட்டு உடைத்து, உள்ளே சென்று ஹேண்ட் பிரேக்களை ரிலீஸ் செய்தனர். பிறகு கார்களை தள்ளி வேறு பகுதிக்கு கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது. பொது மக்கள் சிலர் கற்களால் கண்ணாடிகளை உடைத்து ஹேண்ட்பிரேக்குகளை அகற்றினர்.

    கார்கள் வெடிக்கும் சத்தம் டமால் டமால் என்று கேட்டது. இந்த சம்பவத்தால் சர்வதேச அளவில் பெங்களூரு விமான கண்காட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று, முன்னாள் காண்ட்ராக்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

    English summary
    How fire accident took place at Bangalore Air Show premises here is the background story.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X