பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிப்பு.. எங்கே தவறு நடந்திருக்கிறது.. விஞ்ஞானிகள் கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு

    பெங்களூர்: சந்திரயான் 2வில் உள்ள விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் அதன் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதில் மட்டும் நடந்துவிடவில்லை. விஞ்ஞானிகளே எதிர்பாராத வகையில் லேண்டர் தன் கட்டுப்பாட்டையும் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலவுக்கு சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம 22-ஆம் தேதி இஸ்ரோ அனுப்பியது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலத்தை சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தனர்.

    இந்த மாதம் முதல் வாரத்தில் பிரக்யான் ரோவரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது. இந்த நிலையில் நிலவில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நேற்று அதிகாலை நிகழ இருந்தது. இதற்காக இந்தியாவே தூங்காமல் விழித்திருந்தது.

    நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிப்பு.. இஸ்ரோ தலைவர்நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிப்பு.. இஸ்ரோ தலைவர்

    வேதனை

    வேதனை

    சுமார் 95 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில் நிலவில் தரையிறங்குவதற்கு 2 . 1 கி.மீ. தூரத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் தரையிறங்கியதா என தெரியவில்லை. இதனால் இஸ்ரோ தலைவர் உள்பட விஞ்ஞானிகளும் மன வேதனை அடைந்தனர்.

    குறைப்பு

    குறைப்பு

    இந்த நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் என்ன பிரச்சினை, எங்கு தவறு நடந்திருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தரையில் மெதுவாக லேண்டர் தரையிறங்குவது 3 கட்டங்களை கொண்டதாகும். விண்கலத்தின் வேகத்தை மெதுவாக குறைக்க வேண்டும். அது போல் அதன் உயரத்தையும் ஜீரோ அடையும் வரை மிகவும் மெதுவாக குறைக்க வேண்டும்.

    10 நிமிடங்கள்

    10 நிமிடங்கள்

    அதற்காக விக்ரம் லேண்டரில் 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டன. தரையிறங்க 10 நிமிடங்கள் 20 வினாடிகள் இருந்த போது விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

    தவறு

    தவறு

    இந்த நிலையில் இந்த பிரச்சினை தொலை தொடர்பு பிரச்சினையாக மட்டும் இருக்காது என்றும் லேண்டர் தனது கட்டுப்பாட்டை இழந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தவறு என்பது இரு கட்டங்களுக்கு இடையே நடந்திருக்கும். அதாவது லேண்டர் முழுவதுமாக தரையிறங்கும் கட்டத்திற்கும், மெதுவாக தரையிறங்கும் கட்டத்திற்கும் இடையே தவறு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

    லேண்டர்

    லேண்டர்

    தரையிறங்கும் பணிகள் 4 கட்டங்களாக நடந்து கொண்டிருந்தது. அதாவது 30 கி.மீ. தூரத்திலிருந்து 7.4 கி.மீ., 7.4 கி.மீ டூ 5 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரம் முதல் 400 மீட்டர், 400 மீட்டர் தூரத்திலிருந்து தரையிறங்குதல் ஆகிய 4 கட்டங்கள் உள்ளன. இவை நடைபெறுவதற்கு முன்னரே நிலவிலிருந்து மேலே 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது சில தொழில்நுட்பக் கோளாறுகளால் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

    விஞ்ஞானிகள்

    விஞ்ஞானிகள்

    லேண்டரின் வேகத்தை குறைக்கவும் உயரத்தை குறைக்கவும் பொருத்தப்பட்ட என்ஜின்கள் தற்போது இந்தியா முதல் முறையாக பயன்படுத்தியுள்ளது. இந்த 4 என்ஜின்களும் தரையிறங்குவதற்கு மட்டுமல்ல மிகச் சரியாக தரையிறங்கும்படி முறையாக ஒருங்கிணைத்தலோடு இயக்கப்பட்டிருக்க வேண்டும். தரையிரங்கும் நேரத்தில் இஸ்ரோ பிறப்பிக்கும் கட்டளைகளின் கீழ் செயல்படும் விதத்தில் முன்னதாகவே பிரோகிராமிங் செய்யபபட்டது. எனவே இந்த 4 என்ஜின்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதனால் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நிலையில் லேண்டர் எங்கிருக்கிறது என்பது குறித்த புகைப்படங்களை ஆர்ப்பிட்டர் கருவி வெளியிட்டுள்ளது.

    English summary
    How Vikram lander lost its control? Here are the reasons predicted by scientists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X