பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா!

பஞ்சமாஷாலி மடம் நினைத்தால் நான் பதவி விலக தயார், எனக்கு ஆட்சியில் இருக்க விரும்பம் இல்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பஞ்சமாஷாலி மட நிகழ்ச்சியில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா!

    பெங்களூர்: பஞ்சமாஷாலி மடம் நினைத்தால் நான் பதவி விலக தயார், எனக்கு ஆட்சியில் இருக்க விரும்பம் இல்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பஞ்சமாஷாலி மட நிகழ்ச்சியில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஹர்குட் மடம், ஜெயம்ருத்ஞ்சய சுவாமிஜி குடலசங்கமா பஞ்சமாஷாலி மடம், உடுப்பி பெஜாவர் மடம் ஆகியவை கர்நாடகாவில் முக்கியமான மடங்கள் ஆகும். கர்நாடகாவில் அரசியலில் இந்த மடங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

    அங்கு தேர்தலின் போது, இந்த மடங்கள் எடுக்கும் முடிவுக்குள் அதிக முக்கியத்துவம் பெறும். இந்த மடத்தின் அதிபதிகள் கூறும் நபர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் சம்பவமும் நடந்துள்ளது.

    எம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சுஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு

    மாநாடு

    மாநாடு

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் பஞ்சமாஷாலி சமுதாயத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார். பஞ்சமாஷாலி மடம், கர்நாடக தேர்தலின் போது எடியூரப்பாவிற்கு ஆதரவு அளித்தது. எடியூரப்பாவிற்கு வாக்களிக்கும்படி தங்கள் சமுதாய மக்களுக்கு பஞ்சமாஷாலி மடம் கோரிக்கை வைத்தது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் இன்று நடந்த மாநாட்டில் பேசிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா குருஜி, கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டார். அதில், எங்கள் சமுதாய மக்களை எடியூரப்பா புறக்கணிக்கிறார். எங்கள் சமுதாயத்தை சேர்ந்த நபர்களுக்கு முக்கிய பதவிகள் தர வேண்டும். எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும்.

    ஆதரவு இல்லை

    ஆதரவு இல்லை

    அவருக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்றால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் வாங்குவோம். பஞ்சமாஷாலியின் மொத்த லிங்காயத்து சமுதாய மக்கள் யாரும் உங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். லிங்காயாத்து மக்களின் ஆதரவு உங்களுக்கு போகும் என்று குறிப்பிட்டார்.

    பெரும் கோபம்

    பெரும் கோபம்

    இதையடுத்து கோபம் அடைந்த எடியூரப்பா, என்னால் இதை எல்லாம் கேட்க முடியாது. நான் இங்கிருந்து செல்கிறேன். நான் இதை கேட்க இங்கே வரவில்லை என்று கூறி, அங்கிருந்து எழுந்தார். உடனே பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வச்சதானந்தா எடியூரப்பாவை சமாதானம் செய்து அமர வைத்தார். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

    எடியூரப்பா

    எடியூரப்பா

    அதன்பின் பேசிய எடியூரப்பா, நான் இந்த மடத்திடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். 17 எம்எல்ஏக்கள் எனக்காக பதவி விலகி, தேர்தலை சந்தித்தனர். அவர்களுக்கு நான் அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். அவர்களின் பதவி விலகலும் , உங்களின் ஆதரவும் கிடைக்கவில்லை என்றால் நான் முதல்வர் ஆகி இருக்க முடியாது.

    முடியாது

    முடியாது

    இதனால்தான் நான் முதல்வராக இருக்கிறேன். நீங்கள் எனக்கு அறிவுரை வழங்கலாம். என்னிடம் நேரடியாக பேசலாம். ஆனால் நீங்கள் சொல்வதை வைத்து ஆட்சி நடத்த முடியாது.உங்களுக்கு தேவை என்றால் நான் பதவி விலக கூட தயார். இந்த இருக்கையில் ஒட்டிக்கொண்டு இருக்க நான் தயாராக இல்லை, என்று எடியூரப்பா கூறியுள்ளார். மேடையில் நடந்த இந்த சண்டை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    I'm ready to quit&go home says Angry Yediyurappa in Panchamasali Mutt function in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X