பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் பதவியை விட மாட்டேன்.. குமாரசாமி திட்டவட்டம்.. பின்னணியில் செம பிளான்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka political crisis | முதல்வர் பதவியை விட மாட்டேன்: குமாரசாமி திட்டவட்டம்- வீடியோ

    பெங்களூர்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். இதுவரை இந்த ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்கவில்லை. அவ்வாறு ஏற்றால், அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. பாஜக இயல்பாகவே பெரும்பான்மை பலம் பெறும்.

    I wont resign, says Karnataka CM Kumaraswamy

    இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மனம் நொந்து, குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்று, நிருபர்களிடம் பேசிய குமாரசாமி, நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். 2008-09ல் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகள் யாருக்கும் ஞாபகம் இல்லையா? எனறு கேள்வி எழுப்பினார்.

    இதன் மூலம், குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்துவிட்டது. 2008-09ல் 18 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பா ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு

    இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த அப்போதைய ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார். ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் வாக்கெடுப்புக்கு வரவிருந்த தினத்தின் அதிகாலையிலேயே, அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் போப்பய்யா.

    இதனால், ஆட்சி தப்பியது. இப்போது குமாரசாமி இதே உதாரணத்தைக் கூறியுள்ளதைப் பார்த்தால், அதிருப்தியாளர்களைத் தகுதி நீக்கம் செய்யச் சபாநாயகர் முடிவெடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

    English summary
    Karnataka CM Kumaraswamy says he won't resign his post and remembers Yeddyurappa regime.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X