பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 புதிய வேலையை உருவாக்கி 100பேரின் வேலையை பறிக்கும் ஏஐ தொழில்நுட்பம்... மாறப்போகும் பெங்களூரு

Google Oneindia Tamil News

பெங்களூரு: 10 பேருக்கு புதிய வேலையை கொடுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், அதே சமயத்தில் 100 திறமையான பணியாளர்களின் வேலையை பறித்து வருகிறது. இதன் காரணமாக ஐடி பணியாளர்கள் வேகமாக வேலைகளை இழந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தின் இந்திய தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் இந்த தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதனின் ஒவ்வொரு புதிய இயந்திர கண்டுபிடிப்பும், அவனது வேலைகளை சுலபமாக்கி வருகின்றன. ஆனால் ஒரு காலத்தில் அவனது வேலையை எளிதாக்க வந்த இயந்திரங்கள் இன்று அவனுக்கே போட்டியாக மாறி காலோச்சி வருகின்றன.

1990களில் கம்ப்யூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதில் தொடங்கி, கணிணியில் மெயில் அனுப்புவது வரை பல ஆயிரம் வேலைகளை காலி செய்த இயந்திரங்கள் படிப்படியாக அனைத்து தொழில்களிலும், அனைத்து துறையிலும் மனிதனுக்கு உதவியாக வர ஆரம்பித்தன.

பள்ளிக் கல்வி தரத்தில் பள்ளிக் கல்வி தரத்தில் "பெஸ்ட்" கேரளா.. ரொம்ப ரொம்ப மோசம் உ.பி.. தமிழகத்தின் நிலை?

இப்போது மனிதன் உதவுகிறான்

இப்போது மனிதன் உதவுகிறான்

முன்பு மனிதனுக்கு உதவியாக இருந்தன இயந்திரங்கள்.. ஆனால் இன்று மனிதன் தான் இயந்திரங்களுக்கு உதவியாளானாக மாறி வருகிறான். பல லட்சம் மனிதர்களின் தவறுகளை திருத்தவும், அவர்களின் வேலைகைளை செய்யவும் உதவியாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் இன்று தாங்கள் தான் எல்லாம்., நீங்கள் எங்களுக்கு உதவி செய்தால் போதும் என்ற நிலைக்கு மாற்றிவிட்டன. இயந்திரமாக இருந்தவை இயந்திர மனிதனாக ஆம் ரோபோவாக மாறிவிட்டன. அவைகளுக்கு மனிதனை போல் செயற்கை நுண்ணறிவு திறன் உருவாக்கப்பட்டுள்ளது.

100 பேருக்கு வேலையில்லை

100 பேருக்கு வேலையில்லை

AI என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு திறனால் ( artificial intelligence skills) பல நன்மைகள் மனித சமுதாயத்துக்கு கிடைத்து வந்தாலும், அவைகள் அவனது வேலையை வேகமாக பறித்து வருகின்றன. 10 பேருக்கு புதிய வேலையை கொடுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், அதே சமயத்தில் 100 திறமையான பணியாளர்களின் வேலையை பறித்து வருகிறது.

வேலைகளை இழப்பார்கள்

வேலைகளை இழப்பார்கள்

தகவல் தொழில்நுட்பத்தின் இந்திய தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை யாரையும் பெரிய அளவில் வேலைகளை விட்டு நிறுவனங்கள் நீக்கவில்லை. அகற்றப்படும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் திறமையை அதிகரிக்கவும், மனிதனுக்கும் ஏஐக்கும் உள்ள இடைவெளியை குறைக்கவும் வகையிலும் பயிற்சி அளித்து வருகின்றன. பணிக்கு தேவையான திறமை பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவுக்கு ஐடி நிறுவனங்கள் வந்துள்ளன.

தொழில்நுட்ப சேவை

தொழில்நுட்ப சேவை

பிரபல ஆங்கில ஊடகம் தொழில்நுட்ப திறமை சமநிலை குறித்து அண்மையில் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவை வழங்கி வரும் நெக்ஸ்ட்வெல்த் நிறுவனர் ஸ்ரீதர் மிட்டா, இன்டெல் இந்தியாவின் தலைவர் பிரகாஷ் மல்லையா மற்றும் விப்ரோ டெக்னாலஜிஸின் துணைத் தலைவர் சுப்ரியோ தாஸ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தி உள்ளது.

10பேருக்கு வேலை

10பேருக்கு வேலை

இந்த கலந்துரையாடலின் போது பேசிய ஸ்ரீதர் மிட்டா, "AI தொழில்நுட்பத்தால் 100 வேலைகள் குறைக்கப்பட்டால், 10 வேலைகள் உருவாக்கப்படுகின்றன. வேலைகளை இழக்கும் நபர்கள் வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களே வேறு இடங்களுக்க விலகிச் செல்கிறார்கள். மக்கள் வெவ்வேறு திறன்களுடன் உள்ளதால் புதிய வேலைகளைப் பெறுகிறார்கள்" என்றார்.

இன்டெல் புதிய முயற்சி

இன்டெல் புதிய முயற்சி

பள்ளிகளில் AI ஐ கற்பிப்பதற்கான முயற்சிகளை இன்டெல் தொடங்கியுள்ளது என்று இன்டல் நிறுவனர் மல்லையா கூறினார். மேலும் தொழில் நிறுவனங்களுக்கு வெளியே இப்போது பயிற்சி திறன்களை அளிப்பதற்கான ஒரு கூட்டு அமைப்பு இப்போது தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதேபோல் பல்வேறு நிறுவனங்களில் இருந்து அதற்கான புதிய முயற்சிகளும் தேவைப்படுவதாகவும் நான் நினைக்கிறேன். நாம் அதற்கு வெவ்வேறு வழிகளில் அணுக வேண்டும். தொழில் நிறுவனங்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட் அப்கள்களில் ஏஐ தொழில்நுட்பத்தை நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

ஏஐ தொழில் நுட்பம்

ஏஐ தொழில் நுட்பம்

எங்கள் நிறுவனத்தின் பார்வையில், AI ஐ ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கான ஒரு குறிப்பிட்ட திறன்களாக நாங்கள் காணவில்லை. AI எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது என்று விப்ரோ நிறுவனர் தாஸ் கூறினார்.

 15.7 டிரில்லியன் டாலர்

15.7 டிரில்லியன் டாலர்

இதனிடையே AI தொழில்நுட்பத்திற்கான திறமைகளை வளர்க்க, இன்டெல் இந்தியா 2017 முதல் 1,50,000 க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது கடந்த ஆண்டு pwc வெளியிடப்பட்ட அறிக்கையின்படி .AI இன் உலகளாவிய சந்தை வாய்ப்பு 2030 ஆம் ஆண்டில் சுமார் 15.7 டிரில்லியன் டாலர் (அதாவது 11கோடியோ 6 லட்சத்து 345 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே தான் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் திறமைக்கான தேவையை உயர்த்துவதற்காக AI ஐ மையமாகப் பயன்படுத்த உள்ளன

English summary
If 100 jobs are cut, 10 jobs are created by AI , IT companies are increasingly training talent to fill the gap in artificial intelligence skills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X