பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனமழை வெளுத்து வாங்க போகுது! பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! கவனமாக இருங்க மக்களே..!

Google Oneindia Tamil News

பெங்களூரு : மே 18 ஆம் தேதி பெங்களூரு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமெனவும், இதன் காரணமாக பெங்களூருவுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கத்திற்கு முன்னதாக அதாவது ஐந்து நாட்களுக்கு முன்னதாக மே இருபத்தி ஏழாம் தேதி கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாணி புயல் காரணமாக சாதகமான வானிலை நிலவுவதால் இந்த மாற்றம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமான ஐஎம டி ஏற்கனவே கூறியிருந்தது.

சென்னையில் பெய்த மழை... ஊட்டியாக மாறிய சென்னையால் மகிழ்ச்சியில் மக்கள் சென்னையில் பெய்த மழை... ஊட்டியாக மாறிய சென்னையால் மகிழ்ச்சியில் மக்கள்

பெங்களூருக்கு ஆராஞ்ச் எச்சரிக்கை

பெங்களூருக்கு ஆராஞ்ச் எச்சரிக்கை

இந்த நிலையில் பெங்களூரு மற்றும் கடலோர கர்நாடகா, தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக பெங்களூருவில் கன மழையோ அல்லது மிக கனமழை பெய்யும் எனவும் பெங்களூருவின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

முன்னதாக தமிழ்நாடு கர்நாடகா மற்றும் கேரளாவில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை ஐந்து நாட்களுக்கு பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. கடலோர மற்றும் தெற்கு, உள் கர்நாடகத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. மத்திய வெப்பமண்டல பகுதியான லட்சத்தீவு பகுதியில் ஒரு சூறாவளி சுழற்சி இருப்பதாகவும், மற்றொரு சூறாவளி சுழற்சி வட தமிழக கடற்கரையில் குறைந்த வெப்பமண்டல பகுதிகளில் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை

தென்மேற்கு பருவ மழை

இந்த சூறாவளி சுழற்சி மற்றும் அரபிக்கடலில் இருந்து மேற்கு திசையில் இருந்து வரும் வலுவான தாழ்வு நிலை காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையில், திங்களன்று, தென்மேற்கு பருவமழை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு முன்னேறியுள்ளது என்றும், இது பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்துள்ள பொருளாதாரத்திற்கு முக்கியமான நான்கு மாத பருவ மழையின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் ஐஎம்டி கூறியது.

மழைக்கு சாதகமான சூழ்நிலை

மழைக்கு சாதகமான சூழ்நிலை

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு திசையில் இருந்து காற்றின் வேகம் வலுப்பெற்று வருவதால் தற்போது சில பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் வங்காள விரிகுடாவின் சில பகுதிகள், முழு அந்தமான் கடல் மற்றும் அந்தமான் தீவுகள் மற்றும் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவின் சில பகுதிகளுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாகவும் ஐஎம்டி கணித்துள்ளது.

வெள்ளநீர்

வெள்ளநீர்

வானிலை எச்சரிக்கையை உறுதி செய்யும் விதமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

English summary
The Indian Meteorological Department has warned people to be vigilant as heavy or very heavy rains are expected in Bangalore city and suburbs on May 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X