பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூருவில் பரபரப்பு.. தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.. ஓமைக்ரான் பாதிப்பா?

Google Oneindia Tamil News

பெங்களூரு: புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரு வந்த தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கொரோனா வேக்சின் பணிகள் மூலம் மட்டுமே சில நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளன.

புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்! புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்!

இருப்பினும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக மாறியுள்ளது,

புதிய உருமாறிய கொரோனா

புதிய உருமாறிய கொரோனா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதனால் உலகின் பல நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

பெங்களூரு விமான நிலையம்

பெங்களூரு விமான நிலையம்

இந்தச் சூழ்நிலையில், விமானம் மூலம் பெங்களூரு வந்த தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய அவர்கள் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் (genome sequencing) ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

2 பேருக்கு வைரஸ் பாதிப்பு

2 பேருக்கு வைரஸ் பாதிப்பு

இது குறித்து பெங்களூரு கிராமப்புற துணை ஆணையர் கே ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் கிடைக்க 48 மணிநேரம் வரை ஆகும். அதன் பின்னரே அவர்கள் ஓமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை எங்களால் கூற முடியும்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து 94 பேர்

தென்னாப்பிரிக்காவில் இருந்து 94 பேர்

இருவரும் வெவ்வேறு இடங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் தனிமையில் தான் வைக்கப்படுவார்கள். இதுவரை அதிக ஆபத்துள்ள 10 நாடுகளில் இருந்து பெங்களூருக்கு 584 பேர் வந்துள்ளனர். குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவில் இருந்து மட்டும் 94 பேர் வந்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார். தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகளவு மாற்றங்கள்

அதிகளவு மாற்றங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா நாட்டில் முதலில் கண்டறியப்பட்டது. மற்ற உருமாறிய வைரஸ் வைரஸ்களை காட்டிலும் இதன் புரோத ஸ்பைக்கில் சுமார் 32 மாற்றங்கள் உள்ளது. இந்த புரோத ஸ்பைக் மூலம் தான் மனித செல்களை இந்த வைரஸ் பிடித்துக் கொள்கிறது. இந்த புதிய உருமாறிய கொரோனா அதிக ஆபத்தானது என்றும் மிக வேகமாகப் பரவலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

English summary
Two South African nationals have tested Covid-19 positive at the Kempegowda International Airport. Further test reports would ascertain whether the duo are infected with Omicron variant
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X