பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐன்ஸ்டீன், நியூட்டன் கூற்று தவறு..புவியீர்ப்பு விசை இனி "மோடி அலை".. தமிழக விஞ்ஞானி பொளேர் பொளேர்!

Google Oneindia Tamil News

பெங்களுரு:விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன், நியூட்டன் ஆகியோரின் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்றும், புவியீர்ப்பு விசையை இனி நரேந்திர மோடி அலைகள் என்றே அழைக்கப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

பெங்களுருவில் 106வது அகில இந்திய அறிவியல் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஏராளமான விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அறிவியலை பற்றிய பல கருத்துகளை கூறினாலும் விஞ்ஞானி ஒருவரின் கருத்து அனைத்து தரப்பிலும் உற்று நோக்கப்பட்டது.

Indian scientist says gravitational waves will be renamed as narendra modi waves

ஆழியாறில் உள்ள உலக ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியான கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் என்பவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
21ம் நூற்றாண்டில் பிரபஞ்சத்தில் அறிவியலின் கணக்கீடுகள் வேறு மாதிரி இருக்கும். ஒரே மாதிரியாக கூறப்பட்டு வரும் இயற்பியலின் கணக்கீடுகள் அனைத்தும் மாற்றப்படும். நியூட்டனால் புவியீர்ப்பு விசையியலின் சக்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது கணக்கீடுகள் சரியானவையாக இருந்தன.

அதேபோன்று ஐன்ஸ்டீனும் ஒரு தவறை செய்துள்ளார். அவர் மேதைதான் என்றாலும் கூட, தவறான வழியில் கணக்கீடுகளை கொண்டு உலகத்தை வழி நடத்தி வந்துள்ளார். ஐன்ஸ்டீனில் முழுமையான அறிவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்த பின்னரே இவ்வாறு கூறுகிறேன்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்பது முற்றிலும் தவறானது. இது தொடர்பாக 2015ம் ஆண்டே பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு எவ்வித பலனும் இல்லை.சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த விவரங்களை அனுப்புமாறு பதில் வந்தது. மத்திய அரசு எனக்கு எந்த வழியிலும் உதவவில்லை. அதன் பின்னர் நான், இந்த விவரங்களை நான் 40 நாடுகளுக்கு அனுப்பினேன்.

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன், நியூட்டன் ஆகியோரின் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்றும், புவியீர்ப்பு அலைகளை இனி நரேந்திர மோடி அலைகள் என்றே அழைக்கப்படும் என்றும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

English summary
A scientist from Tamilnadu namely Kannan jegathala Krishnan says, that scientists Einstein, Newton were wrong, gravitational waves will be renamed as Narendra Modi waves, in Bengaluru Science congress meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X