பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை இன்போசிஸ் சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் பெங்களூரில் கடத்தல்.. 3 பேர் மடக்கிப்பிடிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: சென்னையை சேர்ந்த இன்போசிஸ் நிறுவன சீனியர் சிஸ்டம் இன்ஜினியரை பெங்களூரில் கடத்தி வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெபிட் கார்டை கொண்டு உடைகள் வாங்கியதை வைத்து காவல்துறை குற்றவாளிகளை கைது செய்துள்ளது.

சென்னையை சேர்ந்தவர் அனுராக் ஷர்மா (25), இன்போசிஸ் நிறுவனத்தில் சீனியர் சிஸ்டம் மேனேஜராக பணியாற்றுகிறார். சமீபத்தில் அவர் பெங்களூருக்கு அலுவல் விஷயமாக வந்திருந்தார். பின்னர், இரவு பஸ் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டார்.

Infosys software engineer abducted case, Bengaluru police arrested 3

பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு, அருகேயுள்ள பொம்மசந்திரா பகுதியில் இரவு 11.50 மணியளவில் சென்னை செல்ல புக் செய்த எஸ்ஆர்எஸ் டிராவல்ஸ் பஸ்சுக்காக காத்திருந்தார்.

பஸ் வர காலதாமதமான நிலையில், அந்த பக்கமாக ஒரு மாருதி ஆம்னி வேன் சென்றுள்ளது. இவரது அருகே வந்து நின்ற அந்த வேனில் இருந்து திடீரென திபுதிபுவென இறங்கிய சிலர், அனுராக் ஷர்மாவை வேனுக்குள் தள்ளியுள்ளனர்.

பஸ் நிறுத்தத்தில் ஏற்கனவே நின்று நோட்டமிட்ட கொள்ளை கும்பலும், சேர்ந்து கொண்டு அனுராக்கை வேனுக்குள் தள்ளியது. பிறகு வேன் சீறிப் பாய்ந்தது. சில கி.மீ தொலைவிலுள்ள சந்தாபுரா பகுதியில் ஆளில்லாத இடத்தில் அனுராக்கை கீழே தள்ளிய அந்த கும்பல், அவரின் டெபிட் கார்டை பறித்துச் சென்றது.

இதுகுறித்து அனுராக் ஷர்மா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் நால்வர் என்றும், அவர்கள் மிரட்டியதால், கார்டு பின் எண்ணை கொடுத்துவிட்டேன் என்றும் அவர் கூறினார். இதனிடையே ஏடிஎம் மையத்தில் இந்த கார்டை பயன்படுத்தி அந்த கும்பல் ரூ.45,000 பணத்தை எடுத்துவிட்டது. இருப்பினும் போலீசார் துப்பு கிடைக்காமல் கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, கணேஷ், உமேஷ், ஸ்ரீதர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மண்டியா மாவட்டத்தை சேர்ந்த கணேஷ், தனது உறவுக்காரர் ஆம்னி வேனை திருடி அதை வைத்து கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

கடைசியாக அனுராக்கின் டெபிட் கார்டை பயன்படுத்தி, இந்த கும்பல் விலை உயர்ந்த ஆடை வாங்கியுள்ளது. அதை துப்பாக வைத்து, கடையிலிருந்த சிசிடிவி கேமராவை கொண்டு கார் எண்ணை கண்டுபிடித்து போலீசார், ஆனேக்கல் பகுதியில் இந்த ஆம்னியை மடக்கி மூவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வேணு என்பவரை தேடி வருகிறது போலீஸ். பெங்களூர்: சென்னையை சேர்ந்த இன்போசிஸ் நிறுவன சீனியர் சிஸ்டம் இன்ஜினியரை பெங்களூரில் கடத்தி வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெபிட் கார்டை கொண்டு உடைகள் வாங்கியதை வைத்து காவல்துறை குற்றவாளிகளை கைது செய்துள்ளது.

சென்னையை சேர்ந்தவர் அனுராக் ஷர்மா (25), இன்போசிஸ் நிறுவனத்தில் சீனியர் சிஸ்டம் மேனேஜராக பணியாற்றுகிறார். சமீபத்தில் அவர் பெங்களூருக்கு அலுவல் விஷயமாக வந்திருந்தார். பின்னர், இரவு பஸ் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டார்.

பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு, அருகேயுள்ள பொம்மசந்திரா பகுதியில் இரவு 11.50 மணியளவில் சென்னை செல்ல புக் செய்த எஸ்ஆர்எஸ் டிராவல்ஸ் பஸ்சுக்காக காத்திருந்தார்.

பஸ் வர காலதாமதமான நிலையில், அந்த பக்கமாக ஒரு மாருதி ஆம்னி வேன் சென்றுள்ளது. இவரது அருகே வந்து நின்ற அந்த வேனில் இருந்து திடீரென திபுதிபுவென இறங்கிய சிலர், அனுராக் ஷர்மாவை வேனுக்குள் தள்ளியுள்ளனர்.

பஸ் நிறுத்தத்தில் ஏற்கனவே நின்று நோட்டமிட்ட கொள்ளை கும்பலும், சேர்ந்து கொண்டு அனுராக்கை வேனுக்குள் தள்ளியது. பிறகு வேன் சீறிப் பாய்ந்தது. சில கி.மீ தொலைவிலுள்ள சந்தாபுரா பகுதியில் ஆளில்லாத இடத்தில் அனுராக்கை கீழே தள்ளிய அந்த கும்பல், அவரின் டெபிட் கார்டை பறித்துச் சென்றது.

இதுகுறித்து அனுராக் ஷர்மா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் நால்வர் என்றும், அவர்கள் மிரட்டியதால், கார்டு பின் எண்ணை கொடுத்துவிட்டேன் என்றும் அவர் கூறினார். இதனிடையே ஏடிஎம் மையத்தில் இந்த கார்டை பயன்படுத்தி அந்த கும்பல் ரூ.45,000 பணத்தை எடுத்துவிட்டது. இருப்பினும் போலீசார் துப்பு கிடைக்காமல் கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, கணேஷ், உமேஷ், ஸ்ரீதர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மண்டியா மாவட்டத்தை சேர்ந்த கணேஷ், தனது உறவுக்காரர் ஆம்னி வேனை திருடி அதை வைத்து கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

கடைசியாக அனுராக்கின் டெபிட் கார்டை பயன்படுத்தி, இந்த கும்பல் விலை உயர்ந்த ஆடை வாங்கியுள்ளது. அதை துப்பாக வைத்து, கடையிலிருந்த சிசிடிவி கேமராவை கொண்டு கார் எண்ணை கண்டுபிடித்து போலீசார், ஆனேக்கல் பகுதியில் இந்த ஆம்னியை மடக்கி மூவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வேணு என்பவரை தேடி வருகிறது போலீஸ்.

English summary
Bengaluru police have arrested 3 member gang who abduct and rob infosys software engineer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X