பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம்.. கொரோனாவை பரப்புவோம்.. பெங்களூர் இளைஞரின் அதிர்ச்சி போஸ்ட்

Google Oneindia Tamil News

பெங்களூர்: திறந்தவெளியில் தும்முவோம் கொரோனாவை பரப்புவோம் என பேஸ்புக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் போட்ட பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை இன்ஃபோசிஸ் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது.

Recommended Video

    Infosys terminates an employee who encouraged others to spread coronavirus

    உலக நாடுகளை கொரோனா வைரஸ் விழிப்பிதுங்க வைத்துள்ளது. அதை ஒழிக்க மருந்து கண்டறியும் முயற்சிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனாவை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

    அதில் தும்மும் போதும் இருமும் போது கைக்குட்டையை கொண்டோ கை மடிப்பை கொண்டோ செய்ய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

    அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது

    தனியார் நிறுவனம்

    தனியார் நிறுவனம்

    இந்த நிலையில் உலகமே கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிலையில் பெங்களூர் இளைஞர் ஒருவர் கொரோனாவை பரப்ப வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் முஜீப் முகமது (25). இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    அந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில் வாங்க எல்லோரும் சேர்ந்து வெளியில் செல்வோம். பொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம். கொரோனா வைரஸை பரப்புவோம் என தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் காவல் துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறுகையில் இந்த பதிவை போட்டவர் முஜீப் முகமது. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    வருத்தம்

    வருத்தம்

    இவர் கொரோனாவை பரப்புவோம் என தனது பதிவில் போட்டுள்ளார். இதனால் அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது இந்திய சட்டப்பிரிவு 505-இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். இதையடுத்து இவரை பணியிலிருந்து நீக்கியது இன்ஃபோசிஸ் நிறுவனம். மேலும் வருத்தமும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

    நன்னடத்தை விதிகள்

    இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது போன்ற அதிர்ச்சி அளிக்கும் பதிவை எங்கள் ஊழியர் செய்துள்ளது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினோம். இது அவர் தெரியாமல் செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இவை எங்கள் நன்னடத்தை விதிகளுக்கு முரணானது.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    மேலும் இது போன்ற செயல்களை இன்ஃபோசிஸ் ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. எனவே அந்த ஊழியரை பணியிலிருந்து நீக்குகிறோம் என தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் கொரோனாவை தடுப்போம் என போராடி வரும் நிலையில் கொரோனாவை பரப்புவோம் என படித்த இளைஞர் ஒருவர் கூறியுள்ளது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Infosys terminates an employee who posts in facebook that Sneeze in an open area and spread Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X