பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது போதாது.. "புதுமைகளை அறிமுகப்படுத்தனும்.." இந்தியாவை 2047க்குள் வல்லரசாக்கலாம்- நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பெசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 'இந்தியாவை வருகிற 2047-ஆம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்ற முடியும் என்றும் இதற்காக இந்தியாவில் புதுமைகளை அறிமுகப்படுத்துவது அவசியம்' என்றும் தெரிவித்துள்ளார்.

புதுமைகள் அறிமுகம் என்ற தலைப்பில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொழில் வர்த்தக சபையின் 105வது பொதுக்குழு கூட்டம் நடந்த்து.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது:-

தமிழ்நாடுனாலே பிரதமர் மோடிக்கு ஏக பிரியம்! நிர்மலா சீதாராமன் சொன்னதை நோட் பண்ணீங்களா! ஓபன் பேட்டி தமிழ்நாடுனாலே பிரதமர் மோடிக்கு ஏக பிரியம்! நிர்மலா சீதாராமன் சொன்னதை நோட் பண்ணீங்களா! ஓபன் பேட்டி

கொரோனா காலக்கட்டம்

கொரோனா காலக்கட்டம்

கடந்த 2020-ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் பரவலால் உலக நாடுகள் நெருக்கடிகளை சந்தித்தது. இந்தியாவும் கொரோனா பரவலால் கடும் நெருக்கடியை சந்தித்தது. ஆனால் தற்போது நாம் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம். அதற்காக நாம் அனைத்து துறைகளிலும் சாதித்து விட்டோம் என்று கூறவில்லை. கொரோனா காலத்தில் இருந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வெளியில் வந்துவிட்டோம்.

சிறப்பாக செயல்பட்டது

சிறப்பாக செயல்பட்டது

இதேபோல் இத்தகைய நெருக்கடி காலக்கட்டத்தில் இந்தியா பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளது. இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும்.. அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் இங்கு சாலைகள் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது. தடுப்பூசி போடுவதாக இருந்தாலும்... தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்துவதாக இருந்தாலும்.. இந்தியா அவற்றை சரியாக செய்தது. உலக நாடுகளே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தபோதிலும் இந்தியா இதில் சிறப்பாக செயல்பட்டது.

சரியாக செய்தது

சரியாக செய்தது

இதேபோல் இந்தியா அதிக சந்தை வாய்ப்புகளை கொண்டிருக்கும் நாடு. மேலும் இந்தியாவை உலக நாடுகள் வளர்ந்து வரும் நாடு என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தியா கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை செலுத்துவதிலும்.. நிவாரண உதவிகளை செய்வதிலும்.. சிறு-குறு தொழில்களுக்கு உதவிகளை வழங்குவதிலும்... உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பான கவனிக்கும்படியான பணிகளை செய்தது. இது இந்திய மக்களின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

2047-ஆம் ஆண்டுக்குள்

2047-ஆம் ஆண்டுக்குள்


இப்போது இந்தியாவில் புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்வது முக்கியமானதாக உள்ளது. பல்வேறு பணிகளை மேற்கொள்ள இப்போதே நாம் புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இப்போது நாம் தொடங்கினால் தான் வருகிற 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றம் செய்ய முடியும். இவ்வாறு நாம் புதுமையான விஷயங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால் பொருளாதாரத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளுக்கும் நமக்கு தீர்வு கிடைக்கும்.

டிஜிட்டல் துறை

டிஜிட்டல் துறை

இந்தியாவில் கொரோனா காலக்கட்டத்துக்கு முன்பாகவே தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக நிவாரண உதவிகள் எளிதில் மக்களை சென்றடையவும் மற்றும் வெளிப்படைத்தன்மையை இதில் ஏற்படுத்தவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. டிஜிட்டல் துறை தற்போது இன்றியமையாதது. இதுபோன்ற துறைகளினால் நாம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். கல்வி, மருத்துவ சேவைகள் போன்ற பல துறைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்ற அழுத்தம் கொடுத்து வருகிறோம். இவற்றை அறிமுகப்படுத்த அனைத்து சாதகமான வாய்ப்புகளும் இருக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

English summary
Participating in a public meeting in Bangalore, Union Finance Minister Nirmala Sitharaman said that 'India can be made a developed country by the year 2047 and for this it is necessary to introduce innovations in India'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X