பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்ந்திருக்க வேண்டியவர் சுபஸ்ரீ.. இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்.. பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீ மீது பேனர் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி | Chennai Subashree Accident CCTV Video

    பெங்களூர்: பேனர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரமிது என கடந்த மே மாதம் ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). பிடெக் முடித்துள்ள இவர் கனடா நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக தகுதி தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காக காத்து கிடந்தார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளிகரணைக்கு அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சாலையோரம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்திருந்த பேனர் சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார் சுபஸ்ரீ.

    குரல்கள்

    குரல்கள்

    அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.

    பெண் பலி

    பெண் பலி

    இந்தநிலையில் ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி கே அண்ணாமலை டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சென்னையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து இளம் மென்பொருள் என்ஜினியர் ஒருவர் பலியாகிவிட்டார்.

    இழந்தோம்

    இழந்தோம்

    பேனர் சரிந்து விழுந்து சாலையில் விழுந்த அவர் மீது லாரி ஏறியதில் அவரது உயிர் போனது. அவர் செய்த ஒரே தவறு சாலையில் பயணித்ததுதான். அவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவரை இழந்துவிட்டோம்.

    அதிகாரி

    அதிகாரி

    பேனர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரமிது என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பெங்களூர் தெற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்து வந்தார் அண்ணாமலை. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை சேர்ந்த இவர் 2011ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

    ராஜினாமா

    அம்மாநில மக்களால் கர்நாடகாவின் சிங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். தற்போது நண்பரின் மரணத்தால் தான் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    IPS officer K.Annamalai who resigned from his post says All Subhashree did was to travel in a public road.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X