பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேண்டர் இயங்காவிட்டால் என்ன? நிலவை ஆய்வு செய்ய வழியா இல்லை.. விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    லேண்டர் இயங்காவிட்டால் வேற வழி இருக்கு... விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்

    பெங்களூர்: விக்ரம் லேண்டரின் இணைப்பு கிடைக்காததால் ஆர்ப்பிட்டரின் வாழ்நாளை 7 ஆண்டுகளுக்கு இஸ்ரோ உயர்த்தியுள்ளது.

    சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகள் கொண்டிருந்தது.

    அதில் ஆர்பிட்டரானது கடந்த 2-ஆம் தேதி முதல் நிலவின் வட்டபாதையில் சுற்றி வருகிறது. அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது போல் இறங்கவில்லை.

     முதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்! முதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்!

    ஆர்பிட்டர்

    ஆர்பிட்டர்

    நிலவில் தரையிறங்கும் இடத்திலிருந்து 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் இருக்கும் போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த நாளே லேண்டர் விழுந்துள்ள இடத்தை ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

    இஸ்ரோ விஞ்ஞானிகள்

    இஸ்ரோ விஞ்ஞானிகள்

    இந்த நிலையில் 4 நாட்களாகியும் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் இந்த முயற்சியானது கையை மீறி செல்லும் முயற்சியாகும் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் வேறொரு திட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

    நிலவின் சுற்று வட்ட பாதை

    நிலவின் சுற்று வட்ட பாதை

    அதாவது தற்போது ஓராண்டாக உள்ள ஆர்பிட்டரின் வாழ்நாள் காலத்தை 7ஆண்டுகளாக உயர்த்துவது என்பதாகும். இதை எரிப்பொருளை சிக்கனப்படுத்துவதன் மூலம் வாழ்நாளை அதிகரிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றுவட்ட பாதையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வந்தடைந்தது ஆர்பிட்டர்.

    விஞ்ஞானிகள்

    விஞ்ஞானிகள்

    மொத்தம் 1697 கிலோகிராம் எரிபொருளை நிரப்பட்ட ஆர்பிட்டரில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை 500 கிலோகிராம் எரிவாயு மிச்சமுள்ளது. இந்த எரிபொருளை கொண்டு அதன் வாழ்நாளை 7 ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

    ஆர்பிட்டர்

    ஆர்பிட்டர்

    இந்த ஆர்பிட்டரில் நிலவின் மேற்பரப்பை மேப்பிங் செய்வது, மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், டைட்டானியம், இரும்பு, சோடியம் ஆகியவற்றை கொண்டு நிலவின் வளி மண்டலம் குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவைகளை ஆர்பிட்டர் செய்யும். இந்த திட்டத்தில் மிக முக்கியமானது ஆர்பிட்டர்தான். நிலவின் தென் துருவத்தில் ஐஸ்கட்டியாக உள்ள நீரின் அளவை ஆய்வு செய்யும் பணியை ஆர்பிட்டர் செய்யும்.

    ஆர்பிட்டர்தான் ஆறுதல்

    ஆர்பிட்டர்தான் ஆறுதல்

    விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவரின் வாழ்நாள் இன்னும் 10 நாட்கள்தான். ஏனெனில் நிலவில் இருள் வந்து மைனஸ் 170-க்கு குளிராக இருக்கும். அப்போது ரோவரும், ஆர்பிட்டரும் உறைபனியில் சிக்கிவிடும். இதனால் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஆர்பிட்டர்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    English summary
    Chandrayaan -2's orbiter's life span will be extended for 7 years, as of now it will be one year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X