பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலவில் இறங்கும் சந்திரயான் 2.. லைவாக பார்க்க இஸ்ரோ வாய்ப்பு.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

Google Oneindia Tamil News

பெங்களூர்: நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை நேரலையாக பார்க்க பொதுமக்களுக்கு இஸ்ரோ ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 என்ற விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ISRO gives chance to see the landing of Chandrayaan 2 in moon

இவ்வாறு செலுத்தப்படும் விண்கலம் நேரடியாக நிலவுக்குச் செல்லாது. பூமியின் ஈர்ப்பு சக்தியை மீறி வெளியேற வேண்டுமானால், அதிகப்படியான எரிபொருள் செலவாகும்.

அதன்படி பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் புவி ஈர்ப்பு சக்தியையும், விலக்கு விசையும் பயன்படுத்தி பூமியை விட்டு விண்கலத்தை நிலவுக்கு கொண்டு செல்லலாம்.

அதன்படி இந்த விண்கலம் செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இது போல் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி காணவுள்ளார். அவருடன் இணைந்து பொதுமக்களும் நேரலையாக காண ஓர் அரிய வாய்ப்பை இஸ்ரோ வழங்கியுள்ளது.

https://quiz.mygov.in/ என்ற இணையதளத்தில் கேட்கப்படும் அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போர் இந்த அரிய வாய்ப்பை பெறலாம் என இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

English summary
ISRO tweets that Participate and get a chance to watch the Landing of #Chandrayaan2 on the Moon live along with Honorable PM Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X