பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலவை நெருங்கிய நிலையில் 400 மீட்டர் தூரத்தில்தான் கட் ஆகியுள்ளது விக்ரம்.. 2.1 கி.மீ இல்லையாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    லேண்டர் உடனான தொடர்பு 2.1 கி.மீ. தொலைவில் துண்டிக்கப்படவில்லை... பரபரப்பு தகவல்

    பெங்களூர்: இஸ்ரோவுடனான விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. உயரத்தில் இருக்கும் போது என்ற தகவல் தவறானது. உண்மையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் உயரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது.

    சந்திரயான் -2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகள் உள்ளன.

    இதில் லேண்டர் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    தமிழகத்திலும் துணை முதல்வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்தமிழகத்திலும் துணை முதல்வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்

    ஆர்பிட்டர்

    ஆர்பிட்டர்

    இதையடுத்து நிலவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டர் தரையிறங்கியதையும் அது சாய்வாக உள்ளதையும் படம் பிடித்து அனுப்பியது. இந்த நிலையில் ஆர்பிட்டரின் தொடர்பை பெற விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

    7 ஆண்டுகள்

    7 ஆண்டுகள்

    இந்த நிலையில் அதனுடனான தொடர்பை பெறுவது என்பது சற்று கடினம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால் ஆர்பிட்டரின் ஆயுட்காலத்தை ஓராண்டிலிருந்து 7 ஆண்டுகளாக இஸ்ரோ நீட்டித்தது. தற்போது லேண்டர் தரையிறங்குவது குறித்து ஒரு கிராப் வெளியாகியுள்ளது.

    பச்சை நிறம்

    பச்சை நிறம்

    அதில் 3 கோடுகள் உள்ளன. மத்தியில் உள்ள கோடு விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டிய இடத்தை குறிக்கிறது. சிவப்பு நிற கோடு விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ள இடத்தை குறிக்கிறது. அது போல் பச்சை நிறம் விக்ரம் லேண்டரின் சரியான பாதையை குறிக்கிறது.

    தகவல்

    தகவல்

    இந்த கோடுகளை பார்க்கும் போது லேண்டர் நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு 400 மீட்டர் உயரம் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் அது தரையிறங்கியது. ஆனால் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது குறித்து இஸ்ரோ எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

    English summary
    ISRO lost Chandrayaan2' connection 400 meteres above the moon. It was not 2.1 kms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X