பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஜிசாட்-30 செயற்கைக் கோள்

Google Oneindia Tamil News

Recommended Video

    GSAT 30 satellite successfully launched

    பெங்களூரு: இந்தியாவில் ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.

    பிரான்சுக்கு சொந்தமான தென்அமெரிக்காவில் உள்ள கயானாவின் கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு அதி சக்திவாய்ந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய முகமையின் ஏரியேன்-5 ராக்கெட் மூலம் சுமார் 38 நிமிடத்தில் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ISROs GSAT-30 Communication Satellite Launched

    ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு இதுவரை இன்சாட்-4ஏ செயற்கைக் கோள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கு பதிலாக அதிக சக்தியுடன் கூடிய ஜிசாட்-30 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை.. விசாரணைக்கு தயாராகும் செனட் சபை.. கொதிக்கும் டிரம்ப் அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை.. விசாரணைக்கு தயாராகும் செனட் சபை.. கொதிக்கும் டிரம்ப்

    3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட ஜிசாட்-30 செயற்கைக் கோள் DTH, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவைகளுக்கு உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    ISRO's GSAT-30 Communication Satellite Launched onboard Ariane 5 rocket from French Guiana in the early hours of Friday,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X