பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிந்தாலும் அதிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை- இஸ்ரோ

Google Oneindia Tamil News

Recommended Video

    No signal From Vikram Lander

    பெங்களூர்: விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிந்தாலும் அதிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    சந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது. இந்த நிலையில் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரானது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிலவில் தரையிறங்க இருந்தது.

    ISRO says that despite finding location of Vikram Lander, no communication with it yet

    ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவிலிருந்து 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் சற்று தளர்வடைந்தனர். எனினும் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டரின் தகவல்களை சொல்லும் என நம்பிக்கையுடன் இருந்தனர்.

    அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதற்கேற்ப விக்ரம் லேண்டர் இருக்குமிடத்தை ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இஸ்ரோ, லேண்டருடனான தொடர்பை பெற முயற்சித்து வருகிறது.

    லேண்டருடனான தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சி.. அதென்ன 14 நாட்கள் கெடு?லேண்டருடனான தொடர்பை பெற 14 நாட்களுக்குள் முயற்சி.. அதென்ன 14 நாட்கள் கெடு?

    இந்த நிலையில் இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிலிருந்து எந்த தகவலும் இல்லை. ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டருடனான இணைப்பை பெற முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    English summary
    ISRO tweets that Vikram Lander has been located by the orbiter of Chandrayaan2, but no communication with it yet. All possible efforts are being made to establish communication with lander.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X