பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்.6ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31… இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம்

Google Oneindia Tamil News

பெங்களூரு:இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன.

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதி நவீன செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், 40-வது செயற்கை கோளாக ஜிசாட்-31-ஐ இஸ்ரோ தயாரித்துள்ளது.

Isro all set for gsat-31 launch on february 6

2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்-31 செயற்கைகோள், பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து சேவையாற்ற உள்ள இந்த செயற்கைகோளால், இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிடிஹெச் சேவை, டிவி ஒளிபரப்பு உள்ளிட்டவற்றுக்கும் ஜிசாட்-31 செயற்கைகோள் பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளை ஏவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

English summary
India will launch its latest communication satellite onboard European launch services provider Arianespaces launch vehicle on February 6 from French Guiana, ISRO said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X