பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்.. உச்சகட்ட உஷார் நிலையில் இஸ்ரோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    கூடங்குளம் கணினியை ஹேக் செய்தது வடகொரியா: தென்கொரியா தகவல்

    பெங்களூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோவின் தகவல்களும் திருடும் அபாயம் உள்ளதால் அந்நிறுவனத்துக்கு டி டிராக் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹேக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதனால் இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி வடகொரியா ஹேக்கர்களால் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    துரைமுருகனுக்கு என்ன ஆச்சு?.. அப்பல்லோவில் பரிசோதனை.. நலமுடன் இருப்பதாக தகவல்!துரைமுருகனுக்கு என்ன ஆச்சு?.. அப்பல்லோவில் பரிசோதனை.. நலமுடன் இருப்பதாக தகவல்!

    மின் உற்பத்தி

    மின் உற்பத்தி

    இங்கு ரகசிய தகவல்களை திருடுவதற்காக டிடிராக் ரேட் (D Track RAT) தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த வைரஸ்கள் பெரும்பாலான இடங்களில் பண மோசடி செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    பதற்றம்

    பதற்றம்

    கூடங்குளத்தில் தோரியம் கொண்டு தயாரிக்கப்படும் அணு மின் குறித்த தகவல்களை திருடும் முயற்சியே இது என்றும் இந்த தாக்குதலை வடகொரியாதான் செய்தது என்றும் ஆதாரத்துடன் தென்கொரியா வெளியிட்டுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

    சைபர் தாக்குதல்

    சைபர் தாக்குதல்

    சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு 100 மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரோவிலும் சைபர் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்தன. எனினும் அந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இந்த நிலையில் கூடங்குளத்தை தொடர்ந்து இஸ்ரோவிலும் சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இஸ்ரோவில் டிடிராக் வைரஸ் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரோ உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கிறது.

    English summary
    ISRO is alerted with high security message after Kudankulam Power plant was affected in Cyber attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X