பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் துணை முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வராவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி உள்ளிட்ட 30 இடங்களில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனைகளில் இதுவரை கணக்கில் வராத ரூ4 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மூத்த காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

IT Raids continue at 30 premises of G Parameshwara

தற்போது கர்நாடகாவின் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வராவுக்கு வருமான வரித்துறை குறி வைத்திருக்கிறது. பரமேஸ்வராவின் அறக்கட்டளை நிர்வகித்து வரும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 30 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்!4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்!

இன்றும் இந்த சோதனைகள் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை கணக்கில் வராத ரூ4 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

English summary
The Income Tax raids are continuing today at the premises of Siddhartha Medical College, in Bengaluru, which is run by a trust related to Congress leader and former Deputy CM G Parameshwara.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X