பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

23 முறை ஐடி பெண் ஊழியரை கத்தியால் குத்திய ஜிம் ஓனர்.. 9 வருடம் கழித்து ஆயுள் தண்டனை!

சுரேகா கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: 23 முறை சுரேகாவை கத்தியால் குத்தி கொன்ற குற்றவாளிக்கு கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. பெங்களூரில் உள்ள ஜேபி நகர் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிதயில் வசித்து வந்தவர்தான் சுரேகா.. ஐடி துறையில் பணிபுரிந்த வேலை பார்த்தவர் பாயல் சுரேகா. வயசு 26.

it staff surekha murder case and gym owner sentenced to jail

சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது ஜிம்உரிமையாளர் ஜேம்ஸ் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் சுரேகாவை துடிக்க துடிக்க கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பியும் ஓடிவிட்டார். இந்த சம்பவம் பெங்களூரையே அன்று நடுநடுங்க வைத்தது.

இந்த கொலைக்கு காரணம், சுரேகா கணவர் மீது ஜேம்ஸ்-க்கு முன்பகை இருந்தது. அந்த பழியை தீர்த்து கொள்ளதான் சுரேகாவை கொலை செய்தார்.

இப்படி சுரேகாவை கொன்றதை நேரில் பார்த்தவர்கள் பகிரங்கமாக துணிந்து புகார் அளித்தனர். அதனால் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார்.. வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பெற்ற மகளின் சாவுக்கு நீதி வேண்டும் என்று சுரேகா பெற்றோர் சிபிஐ வழக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

கடந்த 9 வருஷமாக சிபிஐ-தான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பின் விசாரணையும் 62 சாட்சியங்களும் முடிந்த நிலையில் இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
nine years after gym owner sentenced to jail in bengaluru it staff payal surekha murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X