பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாராவது மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னா.. சப்புன்னு அறைஞ்சிருங்க.. அதிர வைக்கும் கர்நாடக எம்எல்ஏ

பிரதமர் மோடி குறித்து கர்நாடக எம்எல்ஏ கடுமையாக விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: மோடிக்கு யாராவது ஓட்டு கேட்டுட்டு வந்தால், கன்னத்திலேயே பளார்னு ஒன்னு வைங்க.. அதோட விட்டுடாதீங்க.. அவங்க பல்லை தட்டி கையில தந்திடுங்க" என்று பேசியிருக்கிறார் எம்எல்ஏ ஒருவர்!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தீவிரமான பிரச்சாரம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ சிவலிங்கா கவுடா. இவர் நேற்று ஹசன் நகர் அரசிக்ரே என்ற பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

நாம் எதுவும் செய்யவேண்டாம்.. அதிமுகவை அமமுகவே காலி செய்துவிடும்.. கூலாக பிளான் போடும் ஸ்டாலின்! நாம் எதுவும் செய்யவேண்டாம்.. அதிமுகவை அமமுகவே காலி செய்துவிடும்.. கூலாக பிளான் போடும் ஸ்டாலின்!

கருப்பு பணம்

கருப்பு பணம்

அப்போது திடீரென பிரதமர் மோடியை தாறுமாறாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அப்போது, "2014-ல் மோடி என்ன சொன்னாரு? வெளிநாட்டுல இந்தியர்கள் பதுக்கி இருக்கிற கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவேன்னு சொன்னார் இல்லை?

15 லட்சம் ரூபாய்

15 லட்சம் ரூபாய்

அதேமாதிரி, எல்லாருக்கும் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் பண்ணுவேன்னு சொன்னார் இல்லை? இந்த 5 வருஷத்துல அவர் என்னதான் நிறைவேற்றி இருக்கார்? அதனால, உங்க கிட்ட ஓட்டு கேட்டு பாஜக ஆட்கள் வந்தால், எப்போ அந்த 15 லட்சம் ரூபாய் தருவீங்கன்னு கேளுங்க.

பல்லை உடைங்க

பல்லை உடைங்க

அப்புறம், மோடிக்காக யாராவது ஓட்டு கேட்டு வந்தால், அவங்க கன்னத்தில் பளார்னு ஓங்கி அறைஞ்சிடுங்க.. மோடி வாழ்க-ன்னு யாராச்சும் கோஷம் போட்டால், அவங்க வாய், பல் எல்லாத்தையும் உடைச்சு அனுப்புங்க" என்றார்.

வன்முறை

வன்முறை

எம்எல்ஏ இப்படி பேசியது இணையத்தில் றெக்கை கட்டி பறந்து வருகிறது. கவுடா வன்முறை தூண்டும் வகையில் பேசிவிட்டார், அதனால் அவர் மீது வழக்கு போடுங்கள் என்று கோரிக்கை விடுக்க பாஜகவினர் ஆரம்பித்துவிட்டனர்.

English summary
Karnataka MLA Shivalinge Gowda said that 'Slap those seeking votes for Modi' in Electiion Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X