For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

#RCB பெங்களூர் டீம் ரசிகரா நீங்க.. மனசை இரும்பாக்கிட்டு படிங்க ப்ளீஸ்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: "எச்சரிக்கை..! நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தீவிர ரசிகராக இருந்தால் மேற்கொண்டு படிக்க வேண்டாம்" என்று சொல்வோம் என எதிர்பார்க்காதீர்கள். ஜஸ்ட் ஃபன்தான். நீங்களும் மனசை திடப்படுத்திக் கொண்டு கண்டிப்பாக படிக்கலாம்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போல ஒரு ராசியில்லா ராஜாவை பார்க்கவே முடியாது.

11 வருடங்கள் ஐபிஎல் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது அந்த அணி.

திமுகவில் எடப்பாடியாரா.. இது எப்போ? ஆன்லைன் மூலம் ஆள் பிடிக்க போய்.. தொடரும் திமுகவில் எடப்பாடியாரா.. இது எப்போ? ஆன்லைன் மூலம் ஆள் பிடிக்க போய்.. தொடரும் "டெக்னிக்" பரிதாபங்கள்

 தீயான டீம்தான்

தீயான டீம்தான்

இத்தனைக்கும், பேட்டிங், பவுலிங் இன்று ஒவ்வொரு சீசனிலும் அதிரி புதிரி காம்பினேஷனுடன்தான் பெங்களூர் அணி களம் இறங்கும். போதாத குறைக்கு ஆக்ரோஷ கேப்டன் விராட் கோலி அங்குதான் இருக்கிறார். உலகின் மிகப்பெரிய அதிரடி வீரராக அறியப்படும் டிவில்லியர்ஸ் இருக்கிறார். சிக்சர் மன்னன், கிறிஸ் கெயில் முன்பு அங்கே இருந்தார். அப்போதும், கப்பை தூரத்திலிருந்து எட்டிப் பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை பெங்களூர் அணியால்.

 ஈ சாலா கப் நம்தே

ஈ சாலா கப் நம்தே

சமூக வலைத்தளங்களிலும், பிற அணியின் ரசிகர்கள் பெங்களூர் அணியின் ரசிகர்களை ஒவ்வொரு சீசனிலும் போட்டு வாட்டி வதக்கி வருவார்கள். "ஈ சாலா கப் நம்தே.." அதாவது.. இந்த முறை கப்பு எங்களுடையதுதான்.. என்பது பெங்களூரு அணிக்கான, விளம்பர, கோஷமாக இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையுமே.. அவர்கள், 'இந்த முறை' என்று சொல்வதுதான் பரிதாபமாகவும் இருக்கிறது.

 ஒரு பிளேட் காபி கொடுங்க ப்ளீஸ்

ஒரு பிளேட் காபி கொடுங்க ப்ளீஸ்

இந்த நிலையில்தான், ஒரு ஜோக் சமீபகாலமாக வைரலாக சுற்றிவருகிறது. ஒரு பெண்மணி பகிர்ந்த ஜோக்தான் இது. ஃபீல் செய்து இந்த ஜோக்கை அவர் சொல்லியுள்ளார் பாருங்கள். "இப்படிதாங்க நான் ஒரு நாள் பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு போனேன். சர்வரிடம் ஒரு பிளேட் காபி கொடுங்க அப்படின்னு கேட்டேன். சர்வர் திடுக்கிட்டார். என்ன மேடம், ஒரு பிளேட் காபியா? எனக்கு புரியவில்லையே, என்ன சொல்ல வரீங்க என்று திருப்பிக் கேட்டார். எந்த ஊர் ஓட்டலுக்குப் போனாலும் ஒரு கப் காப்பி கொடுங்கள் என்று சொல்லலாம்தான். ஆனால் பெங்களூரில்தான் கப் இல்லையே. அதான் நான் பிளேட்டில் கொடுங்கன்னு சொன்னேன்" என்றாராம் இந்த பெண்.

அதிருஷ்டம்

அதிருஷ்டம்

இந்த ஜோக்கை பிற அணிகளின் ரசிகர்கள் ஜரூராக ஷேர் செய்து வருகிறார்கள். இருந்தாலும் இது ரொம்ப நக்கல் தான் ஆமா. வெற்றிக்கு திறமை மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும். அந்த வகையில் பெங்களூர் அணிக்கு இதுவரை அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த முறை அதிருஷ்டம் இருக்கலாம். ஏன்னு தெரியுமா? கெஸ் பண்ணுங்க பார்ப்போம். இல்லையா நாங்களே சொல்லிடுறோம்.

ஆடி போய், ஆனி போய், ஆவணி வந்தா..

ஆடி போய், ஆனி போய், ஆவணி வந்தா..

இந்த வாட்டி ஐபிஎல் எப்போ நடக்கும் சொல்லுங்க? ஆங்.. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடக்கும். வழக்கமா கோடை காலம்தான் நடக்கும். ஆனா இப்போ ஐபிஎல் நடக்கும்போதே, ஆடி மாதம் கடந்து போய்விட்டது. "ஆடி போய், ஆனி போய், ஆவணி வந்தா" டாப்புக்கு போய்தானே ஆகனும்! பெங்களூர் டீமும் டாப்புக்கு போகும் பாருங்க.. அவ்வ்வ்வ்!

English summary
A joke on royal challengers Bangalore/RCB IPL team, in social media. In that a woman asking hotel server to give a plate of coffee, instead of a cup of coffee, Because Bangalore has no Cup so far from the IPL tournament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X