பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் ரொம்ப பிஸி.. மத்திய அமைச்சரின் அழைப்பை புறக்கணித்த 'இந்தியாவின் உசேன் போல்ட்' சீனிவாச கவுடா

Google Oneindia Tamil News

Recommended Video

    உசைன் போல்ட் சாதனையை உடைத்த கிராமத்து மனிதர் | Karnataka Villlager beat Usain Bolt’s world record

    பெங்களூர்: கர்நாடகாவில், எருமைகளுடன் ஓடக்கூடிய கம்பாலா என்ற பாரம்பரிய விளையாட்டின்போது, உசேன் போல்டுக்கு இணையான வேகத்தில் ஓடி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியவர் சீனிவாச கவுடா. கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

    இவர், 100 மீட்டர் தூரத்தை, 9.55 வினாடிகளில் ஓடி கடந்து, அது வீடியோவாக நாடு முழுக்க வைரலானது. இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற திறமையாளர்களை, ஒலிம்பிக்கிற்கு தயார்ப்படுத்தினால், சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்த அமைச்சர், பெங்களூரிலுள்ள இந்திய விளையாட்டு அத்தாரிட்டி பயிற்சிக்கூடத்திற்கு வருகை தந்து, பயிற்சியில் பங்கெடுக்குமாறு அழைப்புவிடுத்தார்.

    Kambala Srinivasa Gowda refusing to take Sports Ministers invite for SAI trials

    இந்திய விளையாட்டு அத்தாரிட்டியும்கூட, திங்கள்கிழமையான இன்று, சீனிவாச கவுடா பெங்களூர் வரும் வகையில் ரயில் டிக்கெட் எடுத்து ரெடி செய்து வைத்தது. ஆனால், சீனிவாச கவுடா பெங்களூர் வரவில்லை.

    இதுபற்றி அவரை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓட்டப் பந்தையம் வேறு, கம்பாலாவில் ஓடுவது வேறு. எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது. நான் பயிற்சியில் பங்கேற்கப்போவதில்லை. தொடர்ச்சியாக கம்பாலா போட்டிகளில் மார்ச் 10ம் தேதிவரை நான் பிஸியாக இருப்பேன். இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. எனவே, நான் அமைச்சர் கோரிக்கையை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Kambala Srinivasa Gowda refusing to take Sports Ministers invite for SAI trials

    வுஹான் நகர ஆய்வகத்தில் வைரஸ் உற்பத்தியாகிறது.. 40 வருடம் முன்பே சொன்ன மர்ம நாவல்.. பரபரப்புவுஹான் நகர ஆய்வகத்தில் வைரஸ் உற்பத்தியாகிறது.. 40 வருடம் முன்பே சொன்ன மர்ம நாவல்.. பரபரப்பு

    சீனிவாச கவுடாவின் இந்த பதிலை அறிந்த கிரன் ரிஜிஜு இன்று அளித்த பேட்டியில், ஒலிம்பிக் தர அளவு வேறு, பாரம்பரிய விளையாட்டுக்கான அளவு வேறு. அதிகாரப்பூர்வ பயிற்சி அல்லது சோதனைகள் நடத்திதான், சீனிவாச கவுடாவின் திறமையை உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Sports Minister Kiren Rijiju on Srinivasa Gowda who ran 142.5 meters in 13.62 seconds at a buffalo race (Kambala) on Feb 1: Standard of Olympics is different from traditional sports. It's not right to compare the two as we cannot go by amateur record but only by official trial.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X