எவ்வளவு சொல்லியும் கேக்கலியே... சொல்லாமல் போய்ட்டீயே... நடிகை சேத்தனா ராஜ் தந்தை கண்ணீருடன் கதறல்
பெங்களூர்:பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நிலையில் கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் பலியாகி உள்ளார். சர்ஜரி வேண்டாம் என கூறிய நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் மருத்துவமனையில் சேர்ந்து சேத்தனா ராஜ் இறந்ததாக கூறி அவரது தந்தை கண்ணீர்விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.
பெங்களூர் அப்பிக்கெரேவில் வசித்து வந்தவர் சேத்தனா ராஜ் (வயது 21). இவர் கீதா, துரெசானி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த ‛ஹவையன்' படம் இன்னும் வெளியாகவில்லை.
பெரியார் இருக்க சவார்க்கர் ஏன்? தமிழகத்தில் குஜராத் மாடலை நம்பாதீங்க! போட்டு தாக்கிய ஜிக்னேஷ் மேவானி

சேத்தனா ராஜ் இறப்பு
இந்நிலையில் தான் சேத்தனா ராஜ் பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்தார். நேற்று பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். நேற்று மதியம் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது. இதையடுத்து நுரையீரலில் நீர் தேங்கி அவர் இறந்தார்.

பெற்றோருக்கு தெரியாமல் சிகிச்சை
இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சேத்தனா ராஜ் தனது பெற்றோரான வரதராஜ்-முனிலட்சுமி தம்பதிக்கு தெரியாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்றது தெரியவந்துள்ளது.

சொல்லாமலே சென்றுவிட்டாள்
இதுபற்றி சேத்தனா ராஜின் தந்தை வரதராஜ் கூறுகையில், ‛‛திங்கட்கிழமை காலையில் சுமார் 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். எங்களுக்கு இதுபற்றிய விஷயம் தெரிவதற்குள் சர்ஜரி நடந்து முடிந்துவிட்டது. மாலையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. சர்ஜரி செய்த மருத்துவமனையில் ஐசியூ உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. இதனால் அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார். முன்னதாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டாம் என நானும், எனது மனைவியும் கூறினோம். இதனால் எங்களிடம் சொல்லாமல் மருத்துவமனைக்கு வந்துள்ளார். என்மகளின் சாவுக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம்'' என கண்ணீர் சிந்தினார்.

சிலரது பேச்சை கேட்டு சர்ஜரி