பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்பத்தான் குத்திட்டு வர்றேன்.. லைசென்ஸ் கேட்ட போலீஸாரை அதிர வைத்த கர்நாடக இளைஞர்

ஹெல்மெட் போடாத இளைஞரை விசாரித்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லைசென்ஸ் கேட்ட போலீஸாரை அதிர வைத்த கர்நாடக இளைஞர்-வீடியோ

    பெங்களூரு: அந்த டிராபிக் போலீஸ்காரர்கள் பெரிசா அப்படி ஒன்னும் கேட்டுடல... லைசன்ஸ்தான் கேட்டாங்க... அதுக்கு போய் இளைஞர் அதை எடுத்து காட்டலாமா?!!

    கர்நாடக மாநிலத்தில் சிக்கபல்லவரா என்ற பகுதி உள்ளது. இந்த இடத்தில் டிராபிக் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். யார் யாரெல்லாம் ஹெல்மெட் போடலையோ எல்லாரையும் இழுத்து பிடிச்சு விசாரணை நடத்திட்டு இருந்தாங்க.

    அப்பதான் அந்த இளைஞரும் பைக்கில் வந்தார். ஹெல்மெட் போடாமல் வந்த அவரை போலீசார் ஓரங்கட்டினர். "பேர் என்ன, இப்படி ஓரமா வா" என்றனர். இளைஞரும் தன் பெயர் சந்தீப் ஷெட்டி என்றும் வயசு 26 என்றும் சொன்னார். "சரி, ஏன் ஹெல்மெட் போடலை, லைசன்ஸ் எங்கே? ஃபைன் கட்டு, 100 ரூபாய் எடு" என்றார்கள் போலீசார்.

    கத்தியால் குத்தினேன்

    கத்தியால் குத்தினேன்

    இளைஞரும் பைக்கில் இருந்து ஒன்றை எடுத்தார். பார்த்தால் அது கத்தி.. ரத்தம் சொட்ட சொட்ட அதை வெளியே எடுத்த இளைஞர், "சார்... நான் இப்பதான் என் ஃப்ரண்டைதான் இந்த கத்தியால் குத்திட்டு வந்துட்டு இருக்கேன். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குதான் போறேன் சார்.. சரணடையணும்.. இப்ப போயி என்கிட்ட லைசென்ஸ் கேக்கறீங்களே" என்றார்.

    போலீசில் ஒப்படைப்பு

    போலீசில் ஒப்படைப்பு

    லைசென்ஸ் இல்லையென்றால் 100 ரூபாய் கிடைக்கும் என்று காத்திருந்த போலீசாருக்கு குப்பென்னு வியர்த்து விட்டது. யாருக்கு தெரியும், இளைஞர் ஸ்டேஷன்தான் போக போகிறாரா அல்லது அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவாரா என்று! அதனால் இளைஞரை டிராபிக் போலீசார் லபக்கென்று பிடித்து பக்கத்தில் வைத்து கொண்டு காவல்துறைக்கு போன் செய்தார்கள்.

    கொடுக்கல் - வாங்கல்

    கொடுக்கல் - வாங்கல்

    அவர்கள் விரைந்து வந்து இளைஞரிடம் விசாரணை நடத்தினார்கள். அதற்கு, "ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதற்காக தேவராஜ் என்ற என் ஃப்ரண்ட் கிட்ட 1 லட்சம் ரூபாய் தந்தேன் சார்... 2 வருஷம் ஆகியும் எனக்கு திருப்பியே தரல. அதான் சார் கோபத்துல கத்தியை எடுத்துட்டு போய் குத்திட்டு உங்க கிட்ட வந்துக்கிட்டு இருந்தேன். வழியில இவங்க பிடிச்சி வைச்சிக்கிட்டாங்க" என்றார்.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    இதையடுத்து இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தி, பைக் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். பிறகு கத்தியால் குத்தியவரை பார்க்க போலீசார் விரைந்தனர். அங்கே குத்துயிரும் குலையிருமாக நண்பர் விழுந்து கிடந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    English summary
    Karanataka Police get shocked when they stopped an youth without helmet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X