பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் ரகசிய இடத்தில் 13 எம்எல்ஏக்கள்.. யார் ஏற்பாட்டில் தெரியுமா? கர்நாடக அரசியலில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கூண்டோடு ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள்..கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறது?- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிராக நெருக்கடி அளிக்கும் வகையில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 13 பேர் கோவா செல்வதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக மும்பையில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராகவும் பரமேஸ்வர் துணை முதல்வராக உள்ளார். கூட்டணி ஒருங்கிணைப்பாளராக சித்தராமையா உள்ளார்.

    தற்போது கர்நாடகாவில் இவர்களது கூட்டணி ஆட்சியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அமைச்சராக ஆசைப்பட்டு வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி தலைமைக்கு எதிராக திடீர் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்தனர். பல்லாரி மாவட்டம் விஜயபுரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் வரிசையாக காங்கிரஸ் (10) மற்றும் மதசார்பற்ற ஜனதாளம் எம்எல்ஏக்கள் (3) 13 பேர் ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகரின் செயலாளர் விசாலாட்சியிடம் கொடுத்துள்ளனர்.

    விஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர் விஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர்

    குமாரசாமி தீவிர முயற்சி

    குமாரசாமி தீவிர முயற்சி

    இவர்களை சமாதானம் செய்து ஆட்சியை காப்பாற்றும் முயற்சியில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர் மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சித்தராமையா ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமைச்சர்கள் கூண்டோடு விலகல்

    அமைச்சர்கள் கூண்டோடு விலகல்

    இதன் ஒரு பகுதியாக துணை முதல்வர் பரமேஸ்வர் உள்பட சில அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் முதல்வர் குமாரசாமியை தவிர 31 அமைச்சர்களும் கூண்டோடு அமைச்சர் பதவியில் இருந்து விலகி உள்ளனர்.

    கோவா செல்லவில்லை

    கோவா செல்லவில்லை

    இதன் மூலம் அதிருப்தியில் உள்ளவர்ளுக்கு அமைச்சர் பதவி அளித்து ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ மற்றும் ஜனதா தளம் முயன்று வருகிறது. ஆனால் ராஜினாமா செய்த 13 பேரும் புனே செல்வதாக கூறி பின்னர் கோவா செல்வதாக பயணத்தை மாற்றி சென்றனர். ஆனால் திடீர் திருப்பமாக 13 எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மும்பை பாஜக இளைஞரணி தலைவர் முகித் பாரதியாவின் ஏற்பாட்டில் 13எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ள ஆடம்பர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

    கர்நாடகாவில் கட்சிகள் பலம்

    கர்நாடகாவில் கட்சிகள் பலம்

    சபாநாயகர் இன்று 13 எம்எல்ஏகளின் மீது எடுக்கும் முடிவு தான் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை தீர்மானிக்க போகிறது. ஏனெனில் தற்போ உள்ள நிலையில் பாஜகவின் பலம் 105 ஆகவும், காங்கிரஸ் கட்சியின் பலம் 67 ஆகவும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் பலம் 35 ஆகவும் சுயேட்சைகள் பலம் 2 ஆகவும் பிஎஸ்பி 1 ஆகவும், சபாநாயகர் ஒரு இடம் என்றும் உள்ளது.

    பாஜக பலம் உயர்வு

    பாஜக பலம் உயர்வு

    தற்போது 13 பேர் ராஜினாமா செய்ததால் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையின் பலம் 211 ஆக குறைந்துள்ளது. இதனால் பாஜகவின் பலம் சுயேட்சைகள் ஆதரவுடன் 107ஆக உயர்ந்துள்ளது.ஆளும் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்தின் பலம் 103 ஆக குறைந்துள்ளது. இதனால் ஆட்சி எந்த நேரமும் கவிழும் அபாயம் நிலவுகிறது.

    English summary
    karantaka's 13 Rebel MLAs holed up in a luxury hotel in Mumbai, mlas accompanied by Mohit Bhartiya, president of the Mumbai BJP Yuva Morcha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X